பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

127


கோடுவரை சென்று அங்கு 6 முறை பந்தைத் தரையில் துள்ளவிட்டுப் பிடித்துவிட்டு, மீண்டும் தன்னிடத்திற்கு வந்து சேர்ந்துbதனக்குப் பின்னால் நிற்கும் இரண்டாவது ஆட்டக்காரரிடம் கொடுக்க இவ்வாறு கடைசி ஆட்டக்காரர் செய்து முடிக்கும் வரை ஆட்டம் தொடரும்.

குறிப்பு: எல்லைக்கோட்டை முழுதும் கடந்து அங்கேதான் பந்தைத் தட்டி ஆட வேண்டும்.

88. படகோட்டும் போட்டி

(Boat Centipede Race)

ஆட்ட அமைப்பு: ஒரு தொடரோட்டப் போட்டி ஆட்டத்திற்கு (Relaygame) எவ்வாறு குழுக்களைப் பிரித்து நிறத வேண்டுமோ அதுபோல் ஆட்டக்காரர்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். (87-ஆம் ஆட்டத்தின் அமைப்பு போல்தான்.)

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நீண்ட கம்பு (Pole) கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அந்த நீண்ட