பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

51


மகிழ்ச்சியான போராட்டமாகவே இது அமைய வேண்டும். போட்டியும் பொறாமையும், இதில் புகுந்து விடவே கூடாது. அதனால்தான் ‘செய் அல்லது செத்துமடி’ என்று பெயர் தராமல், ‘துணிந்து செய்’ என்று பெயர் தந்திருக்கிறோம்.

28. கோட்டையைப் பிடி

(Holding the Fort)

ஆட்ட அமைப்பு: எத்தனை ஆட்டக்காரர்கள் வேண்டு மானாலும் இந்த ஆட்டத்தில் பங்கு பெறலாம். இருக்கின்ற ஆட்டக்காரர்களைச் சம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

20 அடி விட்டமுள்ள ஒரு வட்டத்தையும், அதை ஒட்டி 50 அடி விட்டமுள்ள இன்னொரு வட்டத்தையும் முதலில் போட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு குழுவை ஒரு வட்டத்திலும், இன்னொரு குழுவை இன்னொரு வட்டத்திலும் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. விசில் ஒலித்தவுடன், ஒரு வட்டத்தில் நிற்பவர்களை இன்னொரு வட்டத்தில் இருப்பவர்கள் போய் இழுத்தும், தள்ளியும், தூக்கிக் கொண்டு வந்தும் தங்கள் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல, வெளிவட்டத்திலிருந்து வருகிற ஆட்டக் காரர்களை இருக்கும் வட்டத்திலுள்ளவர்களை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு போராட்டம் மூன்று நிமிடங்கள் வரை நீடிக்கும்.