பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

77


தன் தலைக்கு மேலாகப் பின்புறத்தில் உள்ள ஆட்டக்காரர்களுக்குப் பந்தைக் கொடுக்க வேண்டும்.

அதனை வாங்கிய பின் ஆட்டக்காரர், தனக்குப் பின்னால் உள்ளவரிடம் தலைக்கு மேலே கொடுக்க வேண்டும். தரப்பட்ட பந்து குழுவிலே கடைசியாக நிற்கும் ஆட்டக்காரரிடம் வந்ததும், அவர் அதனை எடுத்துக் கொண்டு எல்லைக்கோடுவரை ஒடிய பிறகு திரும்பி வந்து முன்னால் ஆட்டக்காரர் செய்தது போல செய்ய வேண்டும்.

எந்தக் குழுவில் கடைசி ஆட்டக்காரர் முதலில் ஓடி வந்து ஓடத் தொடங்கும் கோட்டை முடிக்கிறாரோ, அவரது குழுவே வென்றதென்று அறிவிக்கப்படும்.

குறிப்பு: எல்லைக் கோட்டை முழுவதும் கடந்து சென்றுதான் திரும்ப வேண்டும்.


48.பந்துபிடிஆட்டம்

(Wandering Ball)

ஆட்ட அமைப்பு: விளையாட வந்திருக்கும் மாணவர்களை, கைகளைக் கோர்த்து ஒரு பெரிய வட்டம் போடச் செய்ய வேண்டும். அந்த வட்டத்திற்குள்ளே இரண்டு அல்லது மூன்று மாணவர்களை நிற்கச் செய்ய வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலி கிளம்பியதும், பந்தை வைத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்து வழங்க வேண்டும். எதிரெதிரே உள்ளவர்களுக்குப் பந்தை எறிய அவர்கள் அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.