டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
81
51.மூவர் ஆட்டம்
(Three Deep)
ஆட்ட அமைப்பு: 80 அடி வட்டம் ஒன்றை முதலில் போட்டிருக்க வேண்டும். வகுப்பில் உள்ள மாணவர்களை இருவர் இருவராகப் பிரித்து, அந்த வட்டத்தைச் சுற்றி நிற்கச் செய்ய வேண்டும்.
இடைவெளி தூரம் 6 அடி இருப்பதுபோல, ஒவ்வொரு இரட்டையரும் ஒருவர் பின் ஒருவராக, வட்டத்தைச் சுற்றி நிற்க வேண்டும்.
விரட்டுவதற்கு ஒருவர், தப்பித்துக் கொண்டு ஓடுவதற்கு ஒருவர் என்ற இருவரைதனியே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் இருவரும் வட்டத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும்.
ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, விரட்டுபவர் தப்பித்துக் கொண்டு ஓட இருப்பவரை விரட்டித் தொட முயற்சிப்பார். அவரும் அவரிடம் சிக்கிக் கொள்ளாமல் வட்டத்தைச் சுற்றியே தப்பித்துக் கொண்டு ஒட முயல்வார்.
ஓட முடியாதபோது உடனே ஓடிப்போய் இரட்டையராக நிற்பவர்களில் முன்னே நிற்பவரும் முன்னாலே போய் நின்று கொள்ளவேண்டும். இப்பொழுது அவர்கள் மூவராக நிற்பார்கள். அவர்களில் கடைசியாக நிற்பவர், உடனே தப்பி ஓடுபவராக மாறி ஓடுவார். அவரை இப்பொழுது விரட்டுபவர் தொடுவதற்காகத் துரத்திக் கொண்டு ஓடுவார்.
அவர் ஓடிப்போய், இன்னொரு இரட்டையருக்கு முன்னால் நிற்க, அவருக்குப் பின்னால் இருப்பவர் தப்பி ஓட என்று ஆட்டம் தொடரும்.