பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஒடுபவரைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவர் விரட்டுபவராகவும், விரட்டுபவர் தொடப்பட்டவராகவும் மாறிவிட, ஆட்டம் மீண்டும் தொடரும்.


52.இடம் தேடும் இரட்டையர்

(Flying Dutchmen)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள மாணவர்களைக் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒரு பெரிய வட்டம் போட்டு நிற்குமாறு முதலில் செய்ய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் கைகளைக் கோர்த்த வண்ணம் நின்று கொண்டிருக்க வேண்டும்.

அவர்களைத் தவிர, இருவரைத் தேர்ந்தெடுத்து இரட்டையர் என கைகோர்த்தவாறு வட்டத்திற்கு வெளியே நிற்கச் செய்ய வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, இடமில்லாத இரட்டையர், வட்டத்தைச் சுற்றி ஓடிவர வேண்டும். ஓடி வரும்போதே அவர்களில் ஒருவர் கைகளுடன் கைகோர்த்து அடுத்தடுத்து நிற்கும் இருவரைச் சேர்ந்தாற்போல் தட்டிவிட்டு ஓட வேண்டும.

வட்டத்தில் நின்று தட்டப்பட்ட இருவரும், வட்டத்தைவிட்டு வெளியே வந்து, தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவர்கள் ஓடிய எதிர்திசைப் புறமாக ஓடி தாங்கள் நின்று கொண்டிருந்த பழைய இடத்திற்கு வந்து சேர்த்துவிட வேண்டும்.

முதலில் வந்து சேர்ந்தவர்கள் காலியான இடத்தில் நின்றுகொள்ள, இடம் கிடைக்காத இரட்டையர், இடம் தேட முன்போல வட்டம் சுற்றித் தொட்டோட வேண்டும். இவ்வாறாக ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.