பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, முதல் ஆட்டக்காரர் ஒரு காலால் நின்று மறுகாலை முன்புறமாக உயர்த்தி முன் பாதத்தை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு நொண்டியடித்தவாறு சென்று, 30 அடிக்கு அப்பால் இருக்கும் எல்லைக்கோட்டைக் கடந்து வந்து தனக்கு அடுத்து நிற்கும் ஆட்டக்காரரைத் தொட்டு விட்டு, கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு எல்லோரும் ஓடி, எல்லா குழுவிற்கும் முன்னே வந்து முடிக்கும் கடைசி ஆட்டக்காரரின் குழுவே வென்றதாகும்.

குறிப்பு: ஒரு காலால் தான் தாண்டித் தாண்டி செல்ல வேண்டும். உயர்த்தியுள்ள காலின் முன்பாதத்தை இரண்டு கைகளாலும் கட்டாயம் பிடித்துக் கொண்டு தான் தத்தித் தாவிப் போகவேண்டும்.

64. கம்பளிப் பூச்சி தொடரோட்டம்

(Cater Pillar Relay)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை 4 குழுவின ராகப் பிரித்து ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிற்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிரே 15 அடி தூரத்தில் எல்லைக்கோடு ஒன்றைப் போட்டு வைத்திருக்க வேண்டும். - - -

ஆடும் முறை: முதல் ஆட்டக்காரர் முன்புறமாகக் குனிந்து தரையைத் தொட்டுக் கொண்டிருக்க அவருக்குப் பின்னால் நிற்கும் ஆட்டக்காரர் கீழே குனிந்து, முன்னால் குனிந்து நிற்பவரின் கணுக்கால்களைப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். இவ்வாறு இருவர் இருவராக நின்று கொண்டிருக்க வேண்டும்.