பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

           27
      வார்த்தைகளும் கோபமாகவே வந்தன்

'கணபதி, எங்களிடம் மேடைப் பிரசங்கமா செய்யறே? இதோ பார் கணபதி, நம்ம' குரூப் 'பிலே இருந்த சுந்த ரத்தை உனக்கு நன்ருகத் தெரியும். அவனை நான் உயிருக் குயிராய் நேசித்தேன். ஆனால், அவனும் உன்னைப்போலவே தான் சதா பாபுவைப்பற்றி என் எதிரிலேயே புகழ்வான். நான் செய்கிற காரியங்களை எல்லாம் எதிர்த்து வந்தான் அவனுக்கு நான் சரியான புத்தி புகட்டி, என் கோஷ்டியிலி ருந்து விரட்டினபோது, என் முகமூடியைக் கிழித்து, அவ மானப்படுத்தாமல் விடப்போவதில்லை' என்று அந்தக் கருங்காலி சவால்விட்டு விட்டுப் போனது உனக்குத் தெரியும்.

    இன்று வரை அவளுல் என்னை என்ன செய்ய முடிந்தது. உங்களைப் போன்ற இரண்டு மூன்று பேரை நம்பி நான் நிற்கவில்லை. நான் விரல் அசைத்தால் அதை உடனே நிறைவேற்ற, ஒத்துழைக்க எண்ணற்ற மாணவர்கள் பலம் என்னிடமிருக்கிறது. நான் இந்த காலேஜ் எலக்ஷனில் வென்ருலும் சரி, தோற்ருலும் சரி அவர்கள் என்றுமே என் பக்கம்தான். அவர்களுக்கு என்னிடமுள்ள அன்பும், விசுவாச மும் அத்தகையது.
   ஆகவே நான் உனக்குச் சொல்லுவதும் இதுதான். நீ இனியும் இப்படியே பாபுவுக்கு சப்போர்ட்டாகப் பேசிக் கொண்டிருப்பதாளுல் நீ அவன் கட்சியிலேயே சேர்ந்து விடு. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனுக இருக்க உன்னே நான் இனி அனுமதிக்கப் போவதில்லை. என்ன சொல்லுகிருய்?’ என்ருன் மூர்த்தி படபடப்புடன்.
 "ஆல் ரைட்.. உங். இஸ்டம். தான் என்ன சொல்லப் போகிறேன். ஆனல் யார் கட்சியுமல்லாத என்னைப்பற்றி நீ கூறிய ஒன்றை மட்டும் நான் மறுத்தே ஆகவேண்டும். நான் பாபுவுக்கு சப்போர்ட்டாக அவன் பக்கம் பேசுகிறேன் என்ருல், அதை நான் இந்த நிமிஷம் வரை மறுக்கவில்லை