பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


அமர்ந்திருந்த நாற்காலியைவிட்டு பேசுவதற்காக மூர்த்தி எழுந்து நின்றபோது, மாணவர்கள் கைதட்டி அவனே வரவேற்ருர்கள். அந்தக் கரவொலிக்கு நன்றி தெரிவித்து விட்டு மூர்த்தி தன் பேச்சைத் துவக்கினன்.

'என் அன்பார்ந்த தோழர்களே, மற்றும் நம் கல்லூரி யில், இதே நேரத்தில் பாபு கூட்டியிருக்கும் கூட்டத்தைப் புறக்கணித்து, மாற்றுக் கட்சியிலிருந்து மனம் மாறி இன்று எங்களுடன் சேர்ந்திருக்கும் புதிய நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் முதற் கண் என் நன்றியையும், அன்பு கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நம்முடைய ஹாஸ்டல் மாணவ நண்பர்கள், ஒரு நெருக்கடியான பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய நிர்ப் பந்தத்திற்கு இலக்காகி இருக்கிருர்கள்.

இங்கு கூடியிருப்போர் எண்ணிக்கையில் குறைவுதான் ஆயினும், கண்ணியத்தில், ஆற்றலில் மிக்கவர்களாகக் கூடி யிருக்கிருேம். காடு நிறையக் குள்ள நரிகளும், ஒநாய்களும் கூடி இருந்தாலும், அவற்றை விரட்டியடிக்க ஒன்றிரண்டு சிங்கங்களே போதும் என்பது போல் கூடியிருக்கிருேம். நமது செகரட்டரி பாபுவின் உண்மைச் சொரூபத்தை வெளிப் படுத்தப் போகும் சிங்கங்களாக இங்கு நாம் கூடியிருக்கி ருேம்.'

மாணவர்கள் கைதட்டி அவன் பேச்சை ரசித்தனர். அந்த ஒசை அடங்கு முன் மூர்த்தி பேச்சைத் தொடர்ந் தான்.

'நண்பர்களே, வளர்த்த கடா மார்பில் பாய்வதே போல், நம்முடைய ஆதரவான ஒட்டுக்களைப்பெற்று செகரட் டரி பதவிக்கு வந்த பாபுவுக்கு நம்மை இலட்சியம் செய்கிற அளவிற்கு தலைக்கணம் வந்து விட்டது. ஏற்றிவிட்ட ஏணியை எட்ட உதைக்கும் நன்றி கெட்ட பாபுவின் ஆணவம், இன்று ஹாஸ்டலில் கொடி கட்டிப் பறக்கிறது. ஆணவக்