பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


வகிக்கமுடியாது. தானகத் தன் பதவியை ராஜினாமாச்செய்ய வேண்டிய அளவுக்கு பாபு ஒரு திருட்டுக்குற்றத்தில் வசமாக அகப்பட்டுக் கொண்டிருக்கிருன்; அதற்கான புகாரையும் முதல்வரிடம் கொடுத்தாயிற்று என்பதையும் இந்த நேரத் தில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களில் பலருக்கு 'பாபுவின் மீது திருட்டுக் குற்றமா? என்று ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனல் நான் அபாண்ட மாக யார் மீதும் எந்தக் குற்றச் சாட்டுக்களையும் ஆதார மில்லாமல் சுமத்துபவனல்ல என்பது உங்களுக்குத் தெரியும். * நம் ஹாஸ்டல் ஸ்டோரிலிருந்து டிபார்ட்டிக்காக வாங்கி வைத்திருக்கும் எவர்சில்வர் செட்டிலிருந்து ஐம்பது பிளேட்டுக்களையும், நூறு ஸ்பூன்களையும் பாபு கடத்திக் கொண்டு போனதைக் கண்ணுரக் கண்ட அவன் கட்சியைச் சேர்ந்த ஒருவன் என்னிடம் வந்து சொல்லித்தான் எனக்குத் தெரியும். பாபு அவற்றை எங்கே பதுக்கி வைத்திருக்கிருன் என்கிற ரகசியத்தையும் அந்த நண்பன் என்னிடம் கூறியிருக் கிருன். அவனது பெயரை நான் இச்சந்தர்ப்பத்தில் கூறுவது முறையாகாது. நாளை, நான் முதல்வருடனும் அந்த நண்ப ஆsடனும் பாபுவின் இருட்டை வெளிப்படுத்தும்போது உங்களுக்குப் புரியும். இப்படிப்பட்ட பாபுவா நமக்கு செகரட்டரியாக இருப்பது?’ என்று கேட்டான் மூர்த்தி.

ஷேம்...வுேம்...பாபுவின் பகல் வேஷத்தைக் கலைத்து அவனிடம் அன்பு கொண்டு அவனை நம்பிக் கொண்டிருக் கும் நம் தோழர்களைக் காப்பாற்றியாக வேண்டும்’ என்று மாணவர்கள் கோஷமிட்டனர்.

உடனே மூர்த்தி, நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங் கள். நமது முதல்வர் இந்தக் கேவலமான திருட்டுக் குற்றத் தைப்பற்றி விசாரணை நடத்தி பாபுவுக்கு உரிய தண்டனை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். திருடர்கள் இருக்க మ74u இடம் எது என்றும் கல்லூரி அல்ல என்றும்