பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


அழையா விட்டாலும், வலியவந்த விருந்தினரை வர வேற்பது நமது தமிழ்ப்பண்பு. அவர்களையும் வரவேற்றுநன்றி கூறி விடை பெறுகிறேன். மாணவ நண்பர்களுக்கெல்லாம் நினைவிருக்கட்டும். புதன்கிழமை நம் கல்லூரி சரித்திரத்தில் ஒரு புனித நாள். புல்லுருவிகளின் விழி பிதுங்கும் நாள். தவ ருமல் மாணவ நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்’ என்று கூறி ரமேஷ் தன் பேச்சை நிறுத்தினன்.

ஒரு நல்ல திரைப்படத்தை டெலிவிஷனில் பார்த்து விட்டுத் திரும்பும் கூட்டம் போல் ரமேஷன் பங்களாவி லிருந்து மாணவர்கள் கூச்சலும் கும்மாளமுமாகப் புறப் பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

6 பாபுவின் பதவித் துறவு

'தன்னை ஒதுக்கும் தியாகம்-இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலைசிறந்த ஞானமாகும்.

-கார்லேல்.

மேவின் வீட்டில் மூர்த்தியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், கல்லூரியிலும் வார்டன் பிரகாஷ் தலைமையில் பாபுவின் மீட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அவன் தன்னுடைய முக்கியமான சில கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் தெரிவிக்கவே அவ்வளவு அவசர மாக அன்றையக் கூட்டத்தைக் கூட்டியிருந்தான். பாபு வின் அழைப்பிற்கிணங்கி காலேஜ் திரண்டு வந்தது போல் ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆயி னும் அவர்கள் எவ்வித ஆரவாரமோ, அவசரமோ காட்டா மல் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.