பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


பொய் மகஜர்களைத் தயாரித்துக் கொண்டிருந்தான். இடை வேளை மணிக்காகக் காத்துக் கொண்டிருந்த அவன் மணி அடித்ததும் நேராக முதல்வரின் அறையை அடைந்தான்.

முதல்வர் தன் அறையில் மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அறைவாசலில் ஸ்டுலில் அமர்ந்திருந்த பியூன் பொன்னுசாமி, என்ன விஷயம்?ஐயாவைப் பார்க்க னுமா?’ என்று கேட்டான்.

"ஆமாம்,' என்று கூறிய மூர்த்தி, ஒரு சிறு துண்டுக் கடிதத்தை பொன்னுசாமியிடம் கொடுத்து அனுப்பினன்.

சற்றைக் கெல்லாம் உள்ளேயிருந்து வெளியே வந்த பொன்னுசாமி மூர்த்தியிடம் 'ஐயா உங்களை உள்ளே வரச் சொன்னுரு , என்ருன்.

முதல்வருக்கு வணக்கம் செலுத்தி விட்டு நின்ற மூர்த் தியை எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிக் கூறிய முதல்வர் 'நானே உன்னைக் கூப்பிட்டு அனுப்ப வேண்டு மென்றிருந்தேன். நீயே வந்து விட்டாய். என்ன விசேஷம். பாபுமீது நீ செய்திருக்கிற துஷ்பிரசாரம் நல்ல சூடு பிடித் திருக்கிருர் போலிருக்கே!” என்ருர்.

உடனே மூர்த்தி, மன்னிக்க வேண்டும் சார்; உங்களு டைய வாயிலிருந்து இப்படியொரு வார்த்தையை நான் எதிர் பார்க்கவில்லை. மற்றவர்கள் பொறுப்பில்லாமல் என்னைப் பற்றிப் பேசினுல் தாங்கிக் கொள்வேன். ஆனல் நீங்களே இப்படிப் பேசியது என் மனத்தைப் புண் படுத்தி விட்டது சார்’ என்று மெதுவான குரலில் கூறினன்.

நான் இப்போது என்ன சொல்லி உன் மனதைப் புன் படுத்தி விட்டேன் மூர்த்தி?’ என்று முதல்வர் ஆச்சரியத் துடன் கேட்டார்.

'ஒரு குற்றச்சாட்டு உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிய புலன் விசாரணையே ஆரம்பமாகவில்லை; அதற்குள் நீங்கள் தீர்ப்பு