பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


பண்ணினேன். நீங்க இங்கே இருக்கிறதா ரைட்டர் நம்பர் கொடுத்தாரு. அவங்க ரெண்டு பேரையும் காலமேருந்து கடையிலேயே உட்கார வெச்சிருக்கேன் சார்; உடனே புறப் பட்டு வர் lங்களா?’’-கட்டைத் தொண்டையில், ‘பஸ்ஸார் ஒலிபோல் டெலிபோனின் மறு முனையிலிருந்து வந்த குரல் ஒலித்தது.

உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துவிட்டேன், அவங்க அங்கேயே இருக்கட்டும், இன்னும் பத்து நிமிஷத் திலே நான் உங்க கடைக்கு வந்துவிடுகிறேன்' என்ருர் முதலவா.

'பர்வாயில்லே சார்; அப்போ நான் போன வெச்சுடட்டுங்களா?’’

'வெச்சுடுங்க, தாங்ஸ்: ரிசீவரை போனில் இணைத்து விட்டுத் திரும்பிய முதல்வர், 'என்ன மூர்த்தி, எனக்கு நேரமாகிறது; இன்னும் இங்கே எங்கெல்லாம் தேடிப் பார்க்கனுமோ, எல்லாம் பார்த்துவிடு. அப்புறம், என்னைக் குற்றம் சொல்லக்கூடாது. கடமை என்று ஒரு காரியத்தைச் செய்ய முனைந்துவிட்டால் பிறகு அதில் தாட்சண்யம் பார்க்கக்கூடாது; பாரபட்சம் பார்க்கக்கூடாது; ஏன், பயப்படக் கூட கூடாது. பொன்னுசாமியைக் கூப்பிடவா; தேடிப்பார்க்க?’ என்று கேட்டார்.

உடனே மூர்த்தி, வேண்டாம் சார்; அவன் பேச்சை நம்பி மோசம் போயிட்டேன்; என்னை மன்னிச்சிடுங்க’ என்று கூறினன். அப்போது அவனுடைய குரல் கரகரத்து, பரி தாபமாக ஒலித்தது. ஆனல் அதை லட்சியம் செய்யாத முதல்வர்,

  • உன்னை மன்னிச்சுட்டா ஹாஸ்டல் சாமான் கிடைக் சுடுமா? கண்டவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு சோதனைக்குப் புறப்படாதே என்று கல்லூரியில் நான் சொன்னபோது உன் காதில் ஏறவில்லை. பாபுமேலே திருட்டுப் பழியைப் போட்டு, காலேஜ் பூரா பிரசாரம்

ஒ.மா.-5