பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


உன்னை நான் அவமானப்படுத்தக்கூடாது கெளரவ மாக இந்த விவகாரத்தை முடிக்க வேண்டும் என்று உனக்கு நான் அளித்த சந்தர்ப்பத்தை யெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதென்கிற அலட்சியத்தில் இழந்து விட்டாய். உன்னு டைய பிடிவாதமும் கர்வமும் இன்னும் அடங்கவில்லை. எதையோ எதிர்பார்த்து இன்று இங்கு ஒரு நாடகத்தை ஆரம்பித்தாய். அதன்மூலம் பாபுவைக்கையும் மெய்யுமாகத் திருட்டுப் பழிக்குள்ளாக்கி வெற்றி வாகை சூடலாம் என்கிற தீய மகிழ்ச்சியோடு என்னையும் அழைத்து வந்தாய்.

'ஆல்ை நானே, நீ இங்கு வந்த பிறகு எப்படி ஏமாறப் போகிருய் என்பதைப் பார்ப்பதற்காக உன்ளுேடு வந்தேன். மூர்த்தி நீ ஆரம்பித்த நாடகத்தின் முடிவு உனக்கே தெரிய வில்லை பார்த்தியா? உன் விரலே உன் கண்ணக் குத்தப் போகிற உன் நாடகத்தின் முடிவை நான் உனக்குக் காட்டு கிறேன். புறப்படு’ என்ற முதல்வர் டிரைவரைக் கூப் பிட்டுக் காரை எடுக்கச் சொன்னர்

பாபுவின் தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறிக்கொண்ட முதல்வர், மூர்த்தியைக் கூப்பிட்டார். அவன் வரத் தயங்கியபடியே எங்கே சார்போகிருேம்?’ என்ருன். அவன் குரல் தீனமாக ஒலித்தது.

"நிச்சயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு இல்லை. தைரிய மாக வா’ என்று கூறிய முதல்வர் 'பாபு நீயும் வந்து உட்காரு’ என்ருர். அது ஒரு கட்டளையைப் போல் இருக் கவே, பாபு மறு பேச்சின்றி அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். மறு நிமிஷம் கார் வந்தது போலவோ ஃபுல் லோடுடன் புறப்பட்டது.

அவ்வளவுதான் கார் கிளம்பிய மறுநிமிஷமே கணபதி, சேகர், நேதாஜி ஆகிய எல்லோரும் தங்கள் சைக்கிளில் ஏறிக் கொண்டு ரேஸ் விடுபவர்கள் போல் படுவேகமாக அந்தக் காரைப் பின் தொடர்ந்து சென்றனர்.