பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


னிைடமும் மன்னிப்புக் கோரும்படி மூர்த்திக்கு உத்தரவு

பிறப்பித்திருந்தேன் அல்லவா?

அதைப்பார்த்ததும் சுப்பையா என்னிடம் ஓடிவந்தான். சார் ரகளை நடந்த அன்றே அாைமணிக்கெல்லாம் மூர்த்தி என்னிடம்வந்தார். தன்னுடைய செய்கைக்காக வருந்தினர். தனக்காகவும் தன் நண்பர்களின் பொருட்டும் என்னிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டு விட்டார் சார். நான்தான் சார் உங்களிடம் சொல்லவில்லை. ஆகவே இனி மீண்டும் ஒரு முறை எதற்கு? வேண்டாம் சார் என்று கூறிச் சென்று விட்டான்.

ஆனல் பிறகுதான் கேள்விப்பட்டேன். நான் யாரிட மும் எதற்காகவும் மன்னிப்புக் கேட்கத் தேவை இல்லைஎன்று மூர்த்தி கூறிக் கொண்டு அலைவதாக, ஒரு நாள் மூர்த்தியை அழைத்து தவறு செய்துவிட்டு பாபுவிடமும், வார்டனிட மும் மட்டும் ஏன் மன்னிப்புக் கேட்க மறுக்கிருய்? இதில் ஒரு கெளரவப் பிரச்னையும் இல்லை. சுப்பையாவிடம் நீ மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டது எனக்கு உன்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா? என்று கேட்டேன்.

அவ்வளவுதான். மறுகணம் அவன் விழிகள் சிவந்து விட்டன.யார் சார் உங்களுக்குச் சொன்னது? சர்வர் சுப்பை யாவிடம் மன்னிப்புக் கேட்டதாக. எங்களுக்கும் மானமிருக் கிறது சார் என் முன் ரோஷமாக.

'சுப்பையாதான் சொன்னன்!’ என்றேன் நான்.

சுத்தப் பொய் சார். இப்படிச் சொல்லித் தனக்குப் பெருமை தேடிக்கொள்ளப் பார்க்கிருன்’ என்று கூறிப்

போய்விட்டான்.

பிறகுதான் யூகித்துப் புரிந்து கொண்டேன்;-என் அறிக்கையின் பேரில் யாரும் தன்னிடம் வந்து மன்னிப்புக்