பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 183

அடித்தளத்தில் ஓடுவதுபோல் ஓடி இறக்கைகளை அடித்தபடியே மேலே எம்பும் இந்த பெரு நாரைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்று கடைசி காலம் வரை வாழ்பவை... இந்த தென்னைக்கு வடக்குப் பக்கம் உள்ள பாக்கு மரம் கிளைகள், விழுதுகள் என்ற பாரம்பரிய பெருமை இல்லாததுதான்... ஆனாலும் எந்த கூத்தாடிப் பறவையும் கூடு கட்ட முடியாமல் நேராய் நிமிர்ந்து நிற்கும் மரம்... இந்த மாமரத்திற்கு வடகிழக்கே உள்ள அத்திமரத்தில் வாழும் பச்சைப் புறாக்களில் ஆண்கள், பெண் புறாக்களைக் கவர்வதற்காக ஒற்றைக் காலில் நின்று கரகம் ஆடுகின்றன... ஒரு பூனை, மரம் ஏறுவதைப் பார்த்ததும், அந்த அத்தி இலைகளோடு இலையாக, தலைகளாய்த் தொங்கி அசைவற் றுக் கிடக்கின்றது...

 இந்தப் பச்சைப்

புறாக்களுக்கும், அத்திக்குமுள்ள உறவைப் பார்த்த மாமரம், சுய இரக்கம் கொண்டது. அதை மறப்பது போல் துக்கித்து, உச்சியைத் தாழ்த்தியது. பின்னர் மீண்டும் சுற்று முற்றும் பார்த்தது...

 வடகிழக்கு மூலையிலுள்ள கரு வேலமரத்தில், தூக்கணாங் குருவிக் கூடுகள்

தொங்குகின்றன... குருவிப் பெண்களை வசியப்படுத்த ஆண் குருவிகள், அந்தக் கூடுகளை அழகியலோடு உருவாக்குகின்றன. வடமேற்கு மூலையில், செம்மண் நிறங் கொண்ட வானம்பாடிகள், புல் மூடிய கூழாங்கல் கூட்டிலிருந்து எழுந்து, கானம் இசைக் கின்றன. மத்திய பகுதியிலுள்ள முரட்டுத்தனமான சோற்றுக் கற்றாழையின் கழுத்துப் பக்கம் ஒரு உள்ளான் குருவி கூடுகட்டி வசிக்கிறது... மாட்டின் குமிழ் போன்ற தோப்புப் பகுதிக்கு அடுத்துள்ள பாலைப் பகுதியில் ஒரு ஒட்டகப் பறவை புதர்ச் செடிகளுக்குள் பயபக்தியோடு போகிறது... அவ்வளவு ஏன்... இதோ இந்த மாமரத்திற்கு அருகேயுள்ள நீர்