பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 98 ஒரு விட்டின கதை ఇUGU # எதுவும் பேசவில்லை. பிறவிப்பெருமாள் பிள்ளை செத்துப்போன பிறகும், புதையல் நினைப்பு வெயிலுக்கு இருந்து வந்தது. அம்மா கேட்ட சோதிடர்களில் ஒருவர் அவனது யோக ஜாதகம் பற்றிப் புகழ்ந்து பேசி, அவனுக்குப் புதையல் கிடைக்கும் என்று கூறியது அவன் மனப் பெட்டியினுள் புதைந்து கிடந்தது. ஆயினும் அப்பா சொன்ன 'பலி விஷயம் அவனை உறுத்தியது. அண்ணன் அநியாயமாய் செத்துப் போனதும், பேய் அவனைப் பலி வாங்கிவிட்டது என்று அம்மா சொன்னதும், வெயிலு, தந்தையின் பேச்சை நினைவு கூர்ந்தான். இனிமேல் புதையல் எனக்குக் கிடைத்தாலும் கிடைக்கும் என்று ஆசைப்பட்டான். தரையில் ஓசை எழுந்து வந்த இடத்தை மிதித்துப் பார்த்தான். அங்கே சத்தம் எதுவும் எழவில்லை. திரும்பத் திரும்ப மிதித்தான். பழைய சத்தம் கேட்கவில்லை. அவனுக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. இயற்கையாக அந்த இடத்தில் ஏதோ குறை இருந்து நாளடைவில் அது சரிப்பட்டுப் போயிருக்கும் என்று பிற்காலத்தில் அவனுடைய அறிவு விளக்கம் கூறிக்கொண்டது. ஆனால் அந்தச் சமயத்தில், 'பூதம் புதையல் பானையை பூமிக் குள்ளே ரொம்ப ஆழத்துக்கு இழுத்துக் கொண்டு போயிருக்கும் என்றுதான் நினைக்க முடிந்தது அவனால். காலை நேரத்தில் அந்த வீட்டின் முன்னே தபால் பையைச் சுமந்து கொண்டு ரன்னர் போவான். அவன் கையில் ஈட்டிக் கம்பு இருக்கும். அதில் இரண்டு வளையங்கள் கிடந்து, அவன் ஒடுகிறபோது ஒலி எழுப்பும், தபால் பை சுமந்து வருகிறவன் வரவைக் கூறுவது போலவும், காட்டு வழிப் போகையில் மிருகங் களுக்கு பயமூட்டி விரட்டவும், அவனுக்குப் பாதுகாப்பாகவும் அந்த ஈட்டியும் வளையங்களும் உள்ள கம்பு பயன்படும் என்று அவனுடைய அப்பா சொன்னார். "ரன்னர் வருவதையும் போவதையும் வெயிலு தினந்தோறும் வேடிக்கை பார்ப்பது வழக்கம். - - சிலசமயம் சிலுங்-சிலுங் என்று வளையங்கள் குலுங்க ஈட்டியை ஆட்டிக் கொண்டு அந்த ரன்னர் மாதிரி ஓடவேண்டும் என்று அவன் ஆசைப்படுவான். சிறுபிள்ளைத்தனமான ஆசைதான். அதுபோல் சிறுபிள்ளைத்தனம் மற்றொன்றும்