பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் வருவதற்காக ராலி ஸைக்கிள் வாங்கினான். அவனைப் போன்ற ஜாலி பிரதர்கள் போட்டு மினுக்குகிறார்கள் என்பதற்காக அவனும் 'லெர்ஜ் கோட் தைத்துக் கொண்டான். வெகுநாள் வரை நீளமாக வளரவிட்டிருந்த தலைமுடியை கிராப் செய்து கொண்டான். மெதுவாகவும் வேகமாகவும் நாட்டிலே பரவி வந்த பல்வேறு மாற்றங்களும் வெயிலுகந்தநாதனிடமும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. 'வீட்டுக்குச் சீதேவி வேணும். பையனுக்கு சீக்கிரமே கல்யாணத்தை பண்ணி வச்சிரனும் என்று தையல்நாயகி அம்மாள் பறந்தாள். தீவிர முயற்சிகள் செய்தாள். வெற்றியும் பெற்றாள். வெயிலுகந்தநாதனுக்கு, அவனுடைய பத்தொன்பதாவது வயசில் கல்யாணம் நிகழ்ந்தது. வீட்டின் ஒளி விளக்காக வந்து சேர்ந்தாள் காந்திமதி. ஆது மகிழ்வண்ணபுரத்தில் ஒரு புதுமை நிகழ்ந்தது. முதல் தடவையாக அந்த ஊருக்கு ஒரு நாடகக்குழு வந்தது. ஸ்பெஷல் டிராமா என்ற பெயரில், உதிரி நடிகர்களை சேர்த்துக் கொண்டு, குழு அமைத்து, ஒரு கான்ட்ராக்டர் ஊர்ஊராகப் போய் நாடகங்களை நடத்துவார். நடிக நடிகைகளுக்கு ஒரு இரவுக்கு இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தம் செய்திருப்பார். இதர செலவுகள் எல்லாம் போக லாபம் காணும்படியாக வசூல் வர வேண்டும். மகிழ்வண்ணபுரத்தில் நல்ல வசூல் இருக்கும் என்றே தோன்றியது. மிஸ் கிருஷ்ணவேணி என்ற நடிகை மேடை மீது ஜொலித்து, ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தாள். "அவளுக்கு பதினேழு வயதுதான் இருக்கும். டால் வீசும் ஜில் சுந்தரியாக விளங்குகிறாள், அவள் சிரிப்பு அப்படியே ஆளை கிறங்க வைக்கிறது" என்று ரசிகசிகாமணிகள் பேசி மகிழ்ந்தார்கள். வள்ளித் திருமணம் நாடகத்தில் வள்ளியாக வந்து பேச்சு சாதுர்யத்தினால் ஜனங்களை பரவசப்படுத்திய மிஸ் கிருஷ்ணவேணி, ஜில் சதாரத்தில் இளவரசனாகத் தோன்றி