பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஒரு விட்டின் கதை வல்லிக்கண்ணன் போன்ற விழிகள்; காண்போரைக் கிறுகிறுக்கச் செய்த பழச்களை உதடுகளில் பூத்துப் பூத்துச் சிந்திய சிறு சிரிப்பு சொக்கிப்போனான் வெயிலு. அவளையே பார்த்தபடி இருந்தான். பபூனை கேலி பண்ணிக்கொண்டிருந்தாள் அவள். ஒரு சந்தர்ப்பத்தில், "உமது பேர் என்ன?" என்று கேட்டாள். பபூனை முந்திக்கொண்டு, முதல்வரிசைப் பிரமுகராய் ஜம் மென்றிருந்த வெயிலுகந்தநாதன் உரத்த குரலில் சொன்னான் "மாமா!" என்று. "மாமா.டாப்பர் மாமா" என்றும் கத்தினான். மிஸ் கிருஷ்ணவேணி அவன் பக்கம் ஒய்யாரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, பபூனை நோக்கிப் பாடினாள், "டாப்பரே, உம்மை நம்பின பேர்கள் பாப்பரே!" என்று. ”ஆகா, பிரமாதம்!" என்று ஆரவாரித்தான் வெயிலு. கடைசி நாடகத்தன்று அவன் மிஸ் கிருஷ்ணவேணிக்கு, அவள் நடிப்புத் திறமையை மெச்சி ஒரு மோதிரம் பரிசளித்தான். அத்துடன் இது முடிந்து விடவில்லை. அந்த ஸ்பெஷல் நாடக கோஷ்டி முகாமிடுகிற ஊர்களுக்கெல்லாம் வெயிலுவும் போய் வருவதில் உற்சாகம் காட்டினான். அதன் கான்ட்ராக்டருக்கு நெருங்கிய நண்பனானான். கால ஓட்டத்தில் அவனே நாடகக் கான்ட்ராக்டராகவும் மாறிவிட்டான். அப்போது வெயிலுக்கு முப்பது வயது. ஒத்தை வீட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. வெயிலுவின் அம்மா தையல்நாயகி இறந்துபோயிருந்தாள். அவள் சாகிற வரையில், மகள் சூடி என்றேனும் ஒருநாள் திரும்பி வரக் கூடும் என்ற நம்பிக்கையோடேயே யிருந்தாள். ஆனால் மகளைப் பற்றிய சிறு தகவல்கடக் கிடைக்கவில்லை. "அவள் போன இடம் புல்லு முளைச்சுப் போச்சு!" என்று வெயிலு கிண்டலாகச் சொல்வது வழக்கம். வெயிலு அந்தப் பெரிய வீட்டுக்கு ஒரு மாடி கட்டுவித்தான். மாடியையே தனது இருப்பிடமாகவும் கொண்டுவிட்டான். சாப்பாடு, படுக்கை, சும்மா பொழுது போக்குவது எல்லாமே மாடியில்தான். அதனால் அந்த ஊரில் மாடிப் பிள்ளை என்றொரு பெயரும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.