பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் கொண்டிருந்தது. எனக்கு இந்த வீட்டிலே இருக்கவே பிடிக்கலே. இங்கேயே இருந்தா எனக்குப் பைத்தியம் புடிச்சிரும்னு தோணுது' என்று அடிக்கடி புழுபுழுத்தாள். "குத்தாலம் பங்களாவுக்குப் போயிருவோமா?" ក្រៅ ជ្រូ கேட்டான் வெயிலு. திரும்பவும் டிராமாவுக்கு அரேஞ் பண்ணுவோமா?" என்றான். தன் மனசை தானே புரிந்து கொள்ள முடியாதவளாய் அவள் குழம்பித் தவித்தாள். ஒருநாள், நாளைக்கு அமாவாசை நாளைக்கு அமாவாசை" என்று அவள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். "அமாவாசைன்னா நமக்கென்ன!" என்று அலட்சியமாகச் சொன்னான் வெயிலு. "பேய்களுக்கு கொண்டாட்டமான நாளு!" என்று முணுமுணுத்தாள் அவள். "கிருஷ்ணா, இந்தா பாரு. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். குரங்கை நினைச்சுக்கிட்டு மருந்தைத் தின்னாதேயின்னு ஒரு வைத்தியன் எச்சரித்தானாம். அதுவே தப்பாய் போச்சு. அந்த நோயாளி மனசிலே குரங்கு நினைப்பே பதிஞ்சு போச்சு மருந்தைத் தொட்ட போதெல்லாம் குரங்கு நினைப்பேதான் வந்துது. அதுனாலே அவனாலே மருந்தைச் சாப்பிடவே முடியலே. அது மாதிரித்தான் உன் மனசும் வேலை பண்ணுது எப்ப பார்த்தாலும் நீ காந்திமதியையும் பேயையும் நினைச்சு நினைச்சே குழம்பிக் கிட்டிருக்கே. வேறே நல்ல விஷயங்களை நினை, கிருஷ்ணா!" என்று அவன் எவ்வளவோ சொன்னான். நள்ளிரவு. வெயிலு அசந்து துங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பயங்கரமான கூச்சல் ஒலித்தது. யாரோ எவராலோ கழுத்து நெரிக்கப்பட்டு, வேதனையால் அலற முடியாமல் அலறுகிற மாதிரி. நீண்ட நேரம் அது ஒலித்திருக்க வேண்டும். அவன் பிரக்ஞை உலுக்கப்படுவதற்கு சிறிது நேரம் பிடித்தது. அவன் திடுக்கிட்டு விழித்தான். அச்சமூட்டும் கூக்குரல். மனிதக் குரல்வளையிலிருந்து எழுந்த போதிலும், தெளிவில்லாமல், ஏதோ ஒரு மிருகத்தின் அவலக் கூச்சல் போலவும் மனிதனது துயர ஒலம் போலவும், அது தொனித்தது. அவன் உடல் நடுங்கியது. உள்ளத்தில் பதை