பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்னன் நெசமாலும் நடந்த மாதிரி அல்லா இருந்தது. அவ கண்ணும், வெறிச் சிரிப்பும்.... என்னை வாழவிடாமப் பண்ணுனியே, நான் உன்னை வாழ விட்டிருவேனா? விடுவேனான்னு கத்திக்கிட்டு அவ நகங்கள் வளர்ந்த விரல்களாலே என்ன பிராண்டுனா. அவ நகம் பட்ட இடமெல்லாம் தியாக் காந்துது. உடனே அங்கே அங்கே குப்குப்னு தி கிளம்புது. என் மேலு, கையி, கழுத்தெல்லாம் தி, அவ விரல்கள் தீ நாக்குகளா ஜொலிக்குது. என் கழுத்தைப் புடிக்க நெரிக்கிறா. நான் கத்த முடியாமக் கத்துறேன்...சி, என்ன மோசமான சொப்பனம் அம்மா!" வெயிலுக்கு அழவேண்டும் போலிருந்தது. ‘எப்படி இருந்தவள்! எவ்வளவு சந்தோஷமா, கலகலப்பா, இருந்தவ! இந்த வீட்டுக்கு வந்து இப்படி ஆயிட்டாளே! என்று அவன் உள்ளம் புலம்பியது. மறுநாள் கிருஷ்ணவேணி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். "இனிமே என்னாலே இந்த வீட்டிலே இருக்க முடியாது. இந்த வீட்டிலே மட்டுமில்லே; உங்க கூட நான் இருக்கிறதும் நல்ல தில்லே. எனக்குப் பைத்தியம் புடிச்சிரும். இத்தனை நாள் சந்தோஷமா இருந்தோம். நமக்குக் கொடுத்து வச்சது அவ்வளவு தான். நான் உங்களை பிரிஞ்சு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றாள். வெயிலுக்கு இது ஒரு அதிர்ச்சிதான். "இந்த வீட்டை உன் பேருக்கு எழுதி வைக்கலாம்னு எண்ணியிருந்தேன். நீ இந்த வீட்டிலேயே இருப்பேன்னு..." அவள் சிரித்தாள். அது விகாரமாக ஒலித்தது. "இந்த வீடா? எனக்கா? நான் இந்த வீட்டிலா?... பேய் புடிச்ச வீட்டிலா?...." அவள் சிரிப்பும் பேச்சும் அவனுக்குப் பிடிக்கவில்லை. உடனடியாக அவள் வெளியேறினால் போதும் என்று தோன்றியது அவனுக்கு. வெயிலுகந்தநாதன் கிருஷ்ணவேணிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தான். "எங்கே போகப் போறே? இனி என்ன செய்யப் போறே?" என்றும் கேட்டான். "நாடகமே உலகம்! நாளை நடப்பதை யார் அறிவார்? இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவனும் செத்துவிட்டானோ!" என்று நாடக வசனம் பேசினாள் கிருஷ்ணவேணி, ஒரு 8