பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் நோக்கம் சிதைவுற்ற தன்மையில் மாறிவிடுவதும் உண்டு என்று கட்டுவது போல வெறுமையாய் காட்சி தந்து நின்றது அந்த வீடு. ஆசையோடு வீடு கட்டிய பிறவிப்பெருமாள் பிள்ளை அதில் நீண்ட காலம் வாழ்ந்துவிடவில்லை. அவர்தான் ஆண்டு அனுபவிக்காமல் போய்விட்டார் என்றால், தன் மக்களும் வழி வழிவாரு வம்மிச விருத்தியா வாழ்ந்த அந்த வீட்டில் வளம் கொழித்துச் செழிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாரே, அதுவும் பொய்த்துவிட்டதே! சின்னவயசிலிருந்து நாற்பத்திரண்டு வயது வரை, ஒரு முப்பத்தைந்து வருட காலம், பெரிய பிள்ளையின் மகன் வெயிலுகந்தநாதன் அந்த வீட்டில் வசித்தான். எப்படி எப்படி எல்லாமோ வாழ்ந்து மடிந்தான். அவனோடு அந்தக் குடும்பத்தின் கதை முடிந்துவிட்டது. அக்குடும்பத்தின் கொழுந்துகளில் ஒன்றான சூடிக்கொடுத்த நாச்சியார் உயிரோடு இருந்தாளா, செத்து ஒழிந்தாளா என்பது அந்த ஊர்காரர்களுக்குத் தெரியாது. வீட்டைவிட்டு ஓடிப்போனவள் பற்றி எந்தவிதமான செய்தியும் வராததால், அவள் செத்துப் போயிருப்பாள் என்று எல்லோருமே முடிவு கட்டிவிட்டார்கள். அது அப்படித்தான் இருக்க வேண்டும். அவள் உயிரோடு இருந்திருப்பின், அந்தக் குடும்பத்தில் மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை எப்படியாவது கேள்விப்பட்டு, பெரிய வீட்டையும் எஞ்சியிருக்கக் கூடிய சொத்தையும் அனுபவிப்பதற்காக உரிமை கோரி வந்திருப்பாளே. வருடங்கள் ஓடின. அவள் வரவேயில்லை. ஆகவே, திரும்பி வராத இடத்துக்கே சூடியும் போய்விட்டாள் என்பதில் சந்தேகமேயில்லை என்று சொந்தக்காரர்கள் உறுதியாய் சொன்னார்கள். சொத்து என்று அதிகமாக எதுவும் இருக்காது. நாடகம் நடத்துகிறேன் என்று சொல்லி, வெயிலு முக்கால் வாசியை நாசமாக்கி விட்டான். அப்புறமும் அடிக்கடி வயல்களை விற்று இஷ்டம்போல் தாறுமாறாகச் செலவு பண்ணினான். கொஞ்சம் நிலம் மிஞ்சியிருக்கக் கூடும். வீடும் இருக்கிறது. உறவினர் கணிப்பு இது. இவற்றை யார் அடைவது என்ற தகராறு தலைதுாக்கியது. வெயிலுவின் பெரியப்பா மகனும் மகள்களும் எங்களுக்கு