பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்னன் அந்த வீட்டில் குடியிருந்த மாணிக்கம் தினசரிப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள் வாங்கிப் படித்தார். பத்திரிகைகளைப் பார்க்கவும் வம்பளக்கவும் பலபேர் கூடினார்கள் அங்கே சும்மா கூடுகிறவர்கள் 'கதந்திர சங்கம் என்று தங்கள் கூட்டத்துக்குப் பெயரை சூட்டிக் கொண்டார்கள். வீட்டின் முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்கள். மகிழ்வண்ணபுரத்துக்கு தேசியப் பிரசாரம் பண்ண வந்த தொண்டர்களுக்கெல்லாம் சுதந்திர சங்கம் வரவேற்பளித்தது. அவர்கள் இரவில் தங்குவதற்கு ஒத்தை வீடு இடம் தந்தது. அந்த வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த ரவிவர்மா சித்திரங்களை எல்லாம் கழற்றி ஒரு அறைக்குள் கொண்டு வைத்தார் அவர். தேசத் தலைவர்களின் படங்கள் பெரிது பெரிதாக, கடைகளுக்கு வந்திருந்தன. பாரத மாதா சித்திரமும் விலைக்குக் கிடைத்தது. அவற்றை எல்லாம் வாங்கி சுதந்திர சங்கம் நிலைபெற்றுவிட்ட ஒத்தை வீட்டுச் சுவர்களில் மாட்டினார். தேசப்பற்றை தீவிரமாகப் பரப்புவதில் முன்னணியில் நின்ற சுதந்திர சங்கு என்ற காலனாப் பத்திரிகையை வாங்கி வந்து, உற்சாகத்தோடு உரக்கக் கத்திப் படிப்பார் மாணிக்கம். தேசத் தலைவர்கள் சரிதம், விடுதலைப் போராட்ட நிகழ்ச்சி முதலியவற்றை விறுவிறுப்பான நடையில் சொல்லும் காலணாப் பிரசுரங்கள் அந்நாட்களில் செல்வாக்குடன் திகழ்ந்தன. அவற்றை விடாது வாங்கினார் மாணிக்கம். திரும்பத் திரும்ப மற்றவர்களுக்கும் படித்துக் காட்டினார். ஒருநாள் மாணிக்கம் டவுணுக்குப் போனார். ஊருக்குத் திரும்பி வரவில்லை, ஜவுளிக்கடை மறியலில் ஈடுபட்டு சட்ட விரோதமான பாட்டுக்களை தெருவில் பாடி கூட்டம் சேர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு மாணிக்கம் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. பனிரெண்டு ஜாதிப் பெயர்களை பட்டம்போல் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக்கொள்கிற-எழுதுகிற-பழக்கம் அடியோடு மறைந்து போகாவிட்டாலும் குறைந்து வந்தது. சிலபேர் காலத்தின்