பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் வாய் மோசமான வசவுகளைப் பொழிந்து கொண்டிருந்தது. அப்போதும் அவள் எதிர்பாராதது நடந்தது. இசக்கியம்மை வெடுக்கென்று அவள் கையிலிருந்த வேட்டியைப் பிடுங்கினாள். அதை சுருட்டி எடுத்து, "இந்தா முருகா வேட்டி, உடுத்திக்கிட்டு சீக்கிரமாய் போய்ச் சேரு!" என்று கூறியபடியே அந்த ஆளிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கிக் கொண்டு சுவருக்கு மறுபுறம் குதித்துவிட்டான். இப்போது இன்னொரு உண்மை பளிச்சிட்டது பர்வதம் மூளையில்-அந்தத் தடியன் விதவை காமாட்சியைத் தேடி வந்தவனில்லை; இந்தக் குமரி இசக்கியம்மையை நாடி வந்தவன் தான். "ஏ தட்டுவாணிச் சிறுக்கி! எத்தனை நாளாட்டி இது நடக்கு?" என்று கேட்டு, மகளை ஏசியபடி, அவளது தலைமயிரைப் பற்றி தலையைச் சுவர் மீது ணங்-ணங்கென்று ஒலி எழும்படியாக மோதினாள். "கள்ளப்புருசன் மானபங்கப்படாம இருக்கணும்னு வேட்டியைப் புடுங்கி அவன் கிட்டே வீசினியேட்டி, தேவ்டியா உனக்கு மானம் வெட்கம் சூடு சொரணை கொஞ்சமாவது இருக்கா?" இசக்கியம்மை வாய் திறக்கவேயில்லை. அவளுக்கே அலுத்து விட்டதும்தான் பர்வதம் மகளை அடிப்பதை நிறுத்தினாள். சவமே, நீ செத்தொழிஞ்சு போ. அப்பதான் என் மனசு சமாதானப்படும்" என்று முடிவுரை கூறிவிட்டு அந்தத்தாய் படுத்து விட்டாள். அப்புறம் வழக்கம் போல எருமைகள் பால் கொடுப்பதும், கோழிகள் வீட்டினுள் எல்லாம் அசிங்கப்படுத்துவதும் ஆடுகள் கத்துவதும் நாய்கள் குரைப்பதும் இடையறாது நடப்பது போலவே இசக்கியம்மையின் காரியங்களும் நடக்கலாயின. அவளுக்கு மாப்பிள்ளை தேடும்படி-சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணி அவளை அந்த ஊரை விட்டு அனுப்பிவிடும்படி-பர்வதம் பாண்டியன் பிள்ளையை விரட்டலானாள். காலம் அதன் இயல்பின்படி ஒடிக்கொண்டிருந்தது. ஒரு கோடை காலம். பகலின் கடுமையான வெயிலைத் தொடர்ந்து, காற்று ஊசலாடாத இரவின் புழுக்கம் தொல்லை கொடுத்தவாறு நகர்ந்தது.