பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்னன் இருப்பினும், ஊரிலேயே பெரிய ஒத்தை வீட்டுக்கு மாதம் இருபது ரூபாய் கொடுத்துக் குடியிருப்பதற்கு எவரும் முன்வரவில்லை. எனவே, அது அநேகமாகப் பூட்டப்பட்டே கிடந்தது. சிலகாலம் பதினைந்து ரூபாய் வாடகையில் யாராவது வந்து தங்குவார்கள். ஒன்றிரண்டு மாதங்கள் இருப்பார்கள். பிறகு, போய் விடுவார்கள். "வீடு பெரிசா இருக்கே தவிர, போதுமான வசதிகள் இல்லை" என்றார்கள். ஆகிவந்த வீடாக இல்லை. இந்த வீட்டிலே இருந்தாலே மனசு இருளடிச்சுப் போகுது. குழப்பமும் கவலையும் பிரச்னைகளும் அடிக்கடி முளைச்சுக்கிட்டே இருக்கே" என்றார்கள். "சில வீடுகளைப் பாருங்க. உள்ளே போனதுமே மனசுக்கு உற்சாகம் தரும். சந்தோஷமா இருக்கும். கையிலே பணம் காசு அதிகம் இல்லேன்னாலும்கூட, அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறதே ஒரு தெம்பாக இருக்கும். சில வீடுகள் அழுமூஞ்சித்தன்மை கொண்டது போல் தோணும். நம்மிடம் இயல்பாக இருக்கிற சந்தோஷத்தையும் வறளடிச்சுப் போடும். ஒத்தை வீடும் அப்படி யாப்பட்டது" என்று ஒருவர் சொன்னார். - டவுணில் சிவகுருநாதனின் மளிகைக்கடை நல்ல முழிப்பாக நடந்தது. லாபம் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனாலே மகிழ்வண்ணபுரத்து வீட்டு வாடகை வந்து தான் ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எதுவும் அவருக்கில்லை. முன்னை மாதிரி 'வீடு திறந்திருக்கணும், யாராவது பெருக்கி மெழுகி விளக்கேத்தி வைக்கனும் என்ற அக்கறையும் இப்போது அவரிடம் இல்லை. அவருக்கும் வயது அதிகமாகிக்கொண்டிருந்தது. அவருடைய மகள்கள் இரண்டு பேருக்கும் நல்ல இடங்களில் கல்யாணம் ஆகி விட்டது. மகன்களில் பெரியவன், சென்னைக்குப் போய்விட்டான். இரண்டாவது பையன் மளிகைக்கடையில் சின்னமுதலாளியாக இருந்து பிசினஸை கவனித்துக்' கொண்டிருந்தான். மற்றப் ைபயன்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். "வீடு அது பாட்டுக்கு வீடாக இருக்கட்டுமே. ஊரிலே நமக்கு ஒரு வீடு இருக்குங்கிறதே மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் உரிய விஷயம் தானே" என்று சிவகுருநாதன் தன் மனைவியிடம்