பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பெருமையாகச் சொல்வது உண்டு. அவர் இந்த மனநிலையில் இருந்தபோதுதான் அதிர்ஷ்டம் அவரைப் பார்த்துக் கண் சிமி ட்டியது! பேராசிரியர் சிவசிதம்பரம் அவரைத் தேடி வந்தார். நகரக் கல்லூரியில் பணிபுரியும் அவர் சிவகுருநாதனக்கு தூரத்து உறவு. எப்பவாவது கண்டு பேசிப் பிரிந்திருக்கிறாரே தவிர, உறவு கொண்டாடி நெருங்கியதில்லை. இப்போது ஒரு காரணமாகத் தான் பேராசிரியர் மளிகைக்கடை முதலாளியை அணுகியிருந்தார். "ஊரிலே உங்க வீடு சும்மா தானே கிடக்கு? இப்ப அதிலே யாரும் வாடகைக்கு இருக்கலேல்லா?" என்று கேட்டார். "யாரும் இல்லை. அஞ்சாறு மாசமா அடைச்சே தான் கிடக்கு" என்றார் சிவகுரு. "அப்போ சரி. அந்த வீடு ஒரு ஆளுக்கு வேண்டியிருக்கு" "யாரு அது? நல்ல ஆளு தானா?" என்று ஒப்புக்கு விசாரித்து வைத்தார் வீட்டுக்காரர். “ரொம்ப நல்ல மனுஷன்னு தான் சொல்லணும். நம்ம பக்கத்து ஆளு இல்லே. வாடகை மாசம் தோறும் அம்பது ரூபா தரத் தயாராயிருக்காரு.." என்றார் சிவசிதம்பரம். பதினான்கு 'அறிவு ஜீவிகள் நடுவிலே-இன்ட்டெலக்சுவல்ஸ் என்று தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மத்தியிலும் - ஆராய்ச்சிப் பசியும் 'ஆய்வு அரிப்பும் அதிகரித்து வந்தன! பட்டம் பெறுவதற்காகவும், பெரிய பெரிய பத்திரிகைகளில் கனமான கட்டுரைகள் எழுதுவதற்காகவும், 'ஸ்ெமினார்கள் (கருத்தரங்குகள்) கூட்டுவதற்காகவும், புத்தகங்கள் எழுதுவதற்காகவும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள் பலப்பலர். உலகம் பூராவுமே இந்த அரிப்பும் பசியும் பரவி வருவதாகத் தோன்றுகிறது. சின்ன விஷயம், பெரிய பிரச்சினை என்று பேதாபேதம் காட் டாமல் எது எதையோ-எல்லா விஷயங்களையுமே-ஆராய்ச்சிக்கு (ஆய்வுக்கு) உரிய பொருளாகக் கொண்டு 'அறிவு ஜீவிகள் வருடங்களை ஒட்டுவதில்