பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பதினைந்து சுயநலத்தினால், தங்களுடைய சொத்தைப் பாதுகாத்துப் பேர் சொல்ல வேண்டும் என்ற ஆசையோடு, தனிமனிதர்கள் தனிநபர்களை தத்து எடுக்கிற வழக்கம் எங்கும் இருந்து வருகிறது. எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும், வசதி குறைந்த வர்கள் வளமும் வாழ்வும் பெறுவதற்கு நாம் உதவிபுரிவோம் என்று அயல்நாடுகள், துரதொலையில் உள்ள வளம் குன்றிய நாடுகளின் சிலசில கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன: உதவிகள் புரிகின்றன. இந்தக் காலத்து அதிசயங்களில் இதுவும் ஒன்றுதான். மகிழ்வண்ணபுரத்துக்கு இத்தகைய ஒரு வாய்ப்புக் கிட்டியது. அதற்கு ஆல்பர்ட்தான் காரணம். அவன், கொள்ள வேண்டிய தொடர்புகளைக் கொண்டு, செய்ய வேண்டிய காரியங்களை முறைப்படி செய்து, பெரிதும் முயன்று அதை சாதித்தான். - அவனுடைய நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் (ஃபவுண்டேஷன்) தாராள மனதுடன்ஆல்பர்ட்டின் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. உதவிகள் புரிய முன்வந்தது. மீண்டும் சிவகுருநாதனுக்கு "அதிர்ஷ்டம் அடித்தது". அந்தப் பெரிய வீடு இருபத்தையாயிரம் ரூபாய்க்கு விலை போயிற்று. அவ்வூரில் வீடுகளின் பணமதிப்பு குறைவாகவே இருந்தது. ஒத்தை வீட்டின் மதிப்பு பத்தாயிரம் ரூபாய்-அதிகம் போனால், பதினையாயிரம்-என்று தான் ஊர் பிரமுகர்கள் கணித்திருந்தார்கள். ஆனால், ஆல்பர்ட், நலம் நாடும் அயல் நாட்டு ஃபவுண்டேஷன் சார்பில், அந்த வீட்டுக்கு இருபத்தையாயிரம் கொடுத்தான். - - இது விஷயமாக அவன் வெளியூர்களில் திரிந்ததால், அந்த வீடு பல வாரங்களாகப் பூட்டிக் கிடந்தது. - திடீரென்று ஒத்தை வீட்டில் பூச்சுமான வேலைகள், வெள்ளை அடிப்பு, பெயின்ட் பூசுதல் எல்லாம் நிகழவும், ஆல்பர்ட் போய் விட்டான்; புதிதாக வேறு யாரோ குடிவரப் போகிறார்கள்