பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 t ஒரு வீட்டின் கதை ఎమ69ఉ567676 பின்னுரை திரு. வல்லிக்கண்ணன் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு: காலமாய்த் தமிழில் எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சமார் 2 வருடங்களுக்கு முன்னதாகவே அவர் ஆயிரம் சிறுகதைகள் எழுதியிருப்பதாக அறிந்து நான் வியந்திருக்கிறேன். மறுமலர்ச்சி காலந் தொடக்கித் தற்காலம் வரை குன்ற இளமையுடன் இவரது எண்ணங்களும் சிந்தனைகளும் திகழ்ந்து வருவதைத் தமிழ் வாசகர்கள் அறிவர். - இலக்கிய வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வரும் முழுநேர எழுத்தாளர்-வல்லிக்கண்ணன். அண்மையில், மிகக் காலங்கடந்து சாகித்ய அகாதெம் இவரைக் கெளரவித்தது. ஒரு வீட்டின் கதை தமிழகத்தின் உட்புற வாழ்க்கையின் ஒரு நூற்றாண்டு வரலாற்றைச் சுவைபடச் சொல்லி, சமூக குடும்ப, தனிமனித உறவுகளைப் பின்னிச் செல்கிறது. பாத்திரப் படைப்பும், போகிற போக்கில் தட்டிவிடுகிற கிண்டல் மொழிகளும் அங்கதச் சிறப்புகளாய் இக்கதை நெடுக விரவி கிடக்கின்றன. அவரது இந்த நாவலை 'கல்பனா மகிழ்ச்சியுடன் வெளியிட்டு திரு.வல்லிக்கண்ணனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து: கொள்ளுகிறது, - -ஜெயகாந்தன் கல்பனா ஆகஸ்ட், 1979.