பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்



தன்னைப் பார்த்து விழித்துக் கொண்டுதான் முனங்குகிறானோ என்று திடுக்கிட்டாள் ராதை. இல்லை, வெறும் கனவு. அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவனையே பார்த்து நின்ற கன்னி துணிந்து விட்டாள். ஆழ்ந்த இருட்டு. நல்ல நிலவு. நெடு இரவின் தனிமை. கனவிலே மிதக்கும் அவன். உணர்ச்சி மீறிய அவள் சந்தர்ப்பம் சிரித்தது.

ராதை புன்னகையோடு அவனருகில் ஒண்டினாள். அவனை இழுத்தனைத்து, உதடுகளில் சூடாக முத்தமிட்டுக் களித்தாள். அவன் கனவு அவளுக்குத் துணை செய்தது. கனவின் உயர்வு என்ற மயக்கத்தோடு சடக்கென விழித்த அவன் இனிய நனவிலே சிக்கியதை உணர்ந்ததும் 'ராதா' என்றான் மெதுவாக.

'ஊம், நான்தான் பேசாமலிருங்கள்' என்று ரகசியம் பேசினாள் அவள்.

அவன் என்ன கட்டையா! உணர்ச்சி வெற்றி பெற்றது.

அது நடந்தது நான்கு வருஷங்களுக்கு முன்பு! அது மற்றவர்களுக்குத் தெரியவே தெரியாது.

விடியற்காலக் கோழி கூவியபோது, ராதை சிரித்தபடி துள்ளி எழுந்து அவனுக்கு அன்பு முத்தம் அளித்து விட்டு வீட்டினுள் போய் தனது இடத்திலே படுத்து விட்டாள். அவன் ஆற்றங்கரை நோக்கிப் போய்விட்டான். திரும்பி வந்ததும் யாத்திரா மார்க்கத்துக்கு வேண்டியனவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். அவன் போவதை ஜன்னலுக்குப்பின் நின்று ஏக்கத்தோடு வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருந்தாள் ராதை, அவன் அந்தப் பக்கம் திரும்பவேயில்லை.

அவன் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்த போது 'என்ன சிவராமு, ராதை கல்யாணத்துக்குக்கூட வராமல் இருந்துட்டியே என்று வரவேற்பும் வருத்த வுரையும் அளித்தார் சங்கரன் பிள்ளை.

'வரமுடியலே. அங்கே இங்கேன்னு பிரயாணம் அப்டீ இழுத்துக்கிட்டே போயிட்டுது' என்று சொன்ன சிவராமன் ராதையின் வாழ்க்கை விவரங்களை விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு தான் திரும்பி வந்தான் என்பதைக் காட்டிக் கொள்ள வில்லை. சங்கரன் பிள்ளை எவ்வளவோ முயன்றும்