பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


காட்சியளித்தது. அவள் உள்ளே போவாள். திரும்பி வரும் பொழுது உடை மாற்றம், அலங்கார மாற்றங்களுடன் திகழ்ந்து அழகு மலராக விளங்குவாள்.

'இதெல்லாம் எனது திறமையை உங்களுக்குக் காட்டுவதற்காகத்தான். எனக்கு ஆடத் தெரியும், பாடத் தெரியும், நடிக்கத் தெரியும் என்று சொன்னால் போதுமா! நிரூபிக்க வேண்டாமா? அதற்காகத்தான் என்று சொல்லிச் சிரித்தாள் எழிலி.

அவள் தாய் சும்மா வேடிக்கை பார்த்து நின்றாள்.

'செல்வா செல்லமாக வளர்ந்த செல்வம். சினிமா நட்சத்திரமாக வேண்டுமென்ற ஆசை அவளுக்கு ரொம்ப அதிகம். அவ அப்பா இருந்தால் அருமை மகள் நடிக்கவேண்டும் என்பதற்காகவே படம் பிடிக்கத் தொடங்கியிருப்பார். இரண்டு வருஷங்களுக்கு முன்னாலேதான் இறந்துபோனார். என்ன செய்றது!' என்றாள் அவள்.

பேச்சை சுலபமாக வேறு திக்கிலே திருப்பி விட்டாள் மகள். 'நான் பல இடங்களில் நாட்டியமாடிப் புகழ் பெற்றிருக்கிறேன், ஸார்!' என்றாள்.

'நீங்கள் ஆடக்கூட வேண்டாம். உங்களைப் பார்த்ததுமே புகழத் தயாராகிவிடுவார்கள் எல்லோரும்!' என்று கூறினேன் சிரிப்பையும் கலந்துதான்.

'என்னை எவ்வளவோ போட்டோக்கள் எடுத்திருக்கிறேன். விதவிதமான போஸ்களில். எல்லாம் எதுக்கு? சினிமாவிலே நான் ஜோராக இருப்பேனா என்று பார்த்துக்கொள்ளத்தான். எல்லாப் படங்களையும் காட்டட்டுமா ஸார்?' என்று துள்ளி எழுந்தாள் அவள்.

'உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே, உங்கள் படங்கள் ஜோராக யிருக்கும். உங்கள் நடிப்பு அற்புதமாக யிருக்கும். நீங்கள் நட்சத்திரமானதும் ரொம்பப் பிரமாதமாக யிருப்பீர்கள்!'

அதுதானே ஸார். புகழ்பெற்ற நட்சத்திரங்களை மட்டுமே பேட்டி கண்டு போடுவதிலே அர்த்தமே கிடையாது. புகழ் பெறப் போகிற நட்சத்திரத்தைத் தேடிப் பிடித்து, அபிப்பிராயம் பெற்றுப் பிரகரிக்க வேண்டும். என்ன, நான் சொல்றது?' என்று கேட்டாள் குமாரி. அப்போது அவள் சித்தரித்த பாவங்கள் ரொம்பப் பிரமாதம்.