பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


பண்பாடு துணைபுரிந்தது என்பதுதான் முக்கியம். தாயின் உரிமையில் தலையிடவோ, மகளின் வளர்ச்சியில் தடை விதிக்கவோ தந்தை பரந்தாமர் விரும்பியதில்லை. ஆசையிருந்தாலும் அவர் வார்த்தைகள் உரிய மதிப்பைப் பெறா என்பது அவருக்கே தெரியும். அதனால் அவர் தன் கெளரவத்தைத் தானே காப்பாற்றிக் கொண்டார்.

குமாரி செல்வா படித்தாள். காலேஜில் காலடி வைத்துப் பார்த்துவிட்டு அது பிடிக்கவில்லை என் விட்டுவிட்டாள். படிப்பிலே என்றைக்குமே அவளுக்கு 'இன்ட்டரஸ்ட்' கிடையாது. தோழிகளுடன் குதித்துக் கூத்தாடுவது, கூப்பாடு போடுவது, 'எட்டு விட்டுக்குக் கேட்கும்படியாக' ஒஹொஹோ ஆஹஹா என்று கத்திச் சிரிப்பது போன்ற காரியங்களைக் குறைவறச் செய்து வந்தாள்.

'பொண்ணாகப் பொறந்தவ இப்படியெல்லாம் நடக்கப்படாது அம்மா. கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக இருக்கணும்' என்று போதித்து அவளுக்கு வழி காட்டக்கூடிய பெரியம்மாள்கள் யாரும் இல்லாததும் குமாரி தான் நினைத்த மூப்பாக வளர்வதற்குத் துணை புரிந்தது.

ஆடத் தெரிவதும் பாடத் தெரிந்திருப்பதுமே நாகரிகம், பெரியதனம் என்று நம்பப்படுகிற இந்தக் காலத்திலே செல்வா இவற்றைப் பயிலாமல் இருக்க முடியுமா? இவற்றுடன் நடிக்கவும் கற்றுக் கொண்டாள் அவள். இவ்வளவு சிறப்புகளுடன் அழகு, அகங்காரம், ஆணவம், அலட்சிய மனோபாவம் ஆகிய நவயுகப் பெண்மைப்பண்புகளைக் குறைவறப் பெற்றிருந்த மாடப்புறா கல்யாணம் என்ற பெயரில் எந்த வேடன் கையிலும் சிக்கித் தன் வாழ்வையே பாழாக்கிக் கொள்ள விரும்பாததில் அதிசயமில்லை. அபாரத் தன்னம்பிக்கையுடன் முன்வந்து அவளை யாராவது கல்யாணம் செய்திருந்தால், அவன் உருப்பட்டுவிடமாட்டான்! அவனையும் அவன் வாழ்வையும் உருப்படவிடாமல் அடிக்கும் திறமை அவளிடமுண்டு.

அவளிடம் குடிகொண்டிருந்த திறமைகளையெல்லாம் சோபிக்கச்செய்து புகழுடன் மிளிரவேண்டும் என்ற ஆசைதான் அம்மாளுக்கும் மகளுக்கும் அதிகம்.

சின்ன வயசிலிருந்தே 'செல்வா சிரித்த முகமும்