பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


வாழ்ந்த அவன் பார்வையில் அழகி செல்வா படாமல் தப்ப முடியுமா? அதிலும் அவள் ரொம்ப 'பிரீயாகப்' பழகும் பண்பினள் என உணர்ந்தபின் அவன்தான் சும்மா இருக்க இயலுமா!

ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்தின் விசேஷ விழாவில் கலந்து சிறப்பித்த குமாரி செல்வா அந்தக் கலையழகு குலையாமல் மெதுநடை நடந்து கொண்டிருந்தாள் வீடு நோக்கி நிலந்தடவும் நீண்ட பாவாடை அலையலையாய் சுருண்டு பளபளத்து அசைய, மேலே கிடந்த பகட்டான தாவணி கவனத்தை இழுக்க, பூ முடித்த கூந்தல் தனியெழிலுடன் மிளிர, பவுடர் - கண்மை - லிப்ஸ்டிக் முதலிய 'மேக்அப்' பூச்சுகள் பளிச்சிட ஆடி அசைந்து சென்ற செல்வா ரோட்டில் செல்லும் அனைவரது பார்வையையும் இழுக்கும் வனப்புச் சுடராக விளங்கினாள்.

பின்னால் காரில் வந்த ராஜாவின் மனதை அலைக்களித்தது அசைந்து சென்ற குமாரியின் சிங்காரத் தோற்றம். வேகமாக முன் சென்றுவிட்ட காரிலிருந்து திரும்பிப் பார்த்த ராஜாவின் பார்வையைக் குமாரியின் முழுநிலவு முகமும், காந்தக் கண்களும் வசீகரித்தன. ஆகவே காரை நிறுத்தினான்.

பொங்கிவரும் அலைபோல் கம்பீர்யமாக நடந்த அழகி அருகே வந்ததும் 'வீட்டுக்குத் தானே? காரில் ஏறிக் கொள்ளுங்களேன்!' என்று உபசரித்தான் ராஜா.

வெட்டும் பார்வை. கொல்லும் ஒரு புன்சிரிப்பு, குளிர்ந்த குரலில் 'எதுக்கு வீண் சிரமம்!' என்ற பதில். இவற்றை ஏககாலத்தில் அளித்த குமாரி சிறிது முன் அசைந்தாள். எல்லாம் அவனை அடிமைகொள்ளும் சக்திகளாய் இலங்கின.

'சிரமம் ஒன்றுமில்லை, மிஸ் செல்வா. சும்மா காரில் ஏறிக் கொள்ளுங்கள்' என்று குழைந்தான் அவன். அவளும் அதிகமாக பிகு செய்யவில்லை.

அவள் காரினுள் அடைக்கலமானதனால் காரே அற்புத அழகு பெற்றுவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. 'நாம் இதுபோல் சொந்தக் காரில் என்று தான் போகமுடியுமோ? ஒரு அழகான கார் அவசியம் தேவைதான்' என்று நினைத்தாள் அவள்.

'இன்று உங்களுடைய நடனம் ரொம்பப்பிரமாதம். உங்கள் கலை நிகழ்ச்சியை விசேஷமாக இன்றையப் புரோகிராமில்-