பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


செய்யலாம். எவ்வளவு பணம் வேணுமாயினும் வாரி இறைக்கலாம்' என்று கிசுகிசுத்தது அவன் மனம்.

கன்னம் தொட்ட மணிக்கரத்தைத் தன் கைநீட்டித்தொட முயன்ற வேலையிலே பிடியினில் அகப்படாக் கனவின் எழில்போல் விலகி ஓடினாள் குமாரி. தூர நின்று கிண்கிணிச் சிரிப்பு ஆர்த்துக் குதித்தாள்.

'ஏது ஆனந்தம் ஆளையே தூக்கிக்கொண்டு போகுதே! ஏனம்மா இந்தச் சிரிப்பாணியும் குதிப்பும்?' என்று கேட்டபடி வந்தாள் தாய், டியன் காபி முதலியன சுமந்து.

மகள் விஷயத்தைச் சொல்லவும் அவள் உள்ளத்திலும் ஆனந்தம் நிறைந்தது. 'செய்யக்கூடியவன்தான். செல்வம் நிறைய இருக்கு செய்யலாம். அவன் பேச்சு தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது செல்வாவின் பொறுப்பு' என்று நினைத்தாள் சங்கர புஷ்பம்.

செல்வா தன் பொறுப்பை நன்கு உணர்ந்திருந்தாள். அது மட்டுமல்ல. முன்னேறுவதற்குக் கையாள வேண்டிய கலை தயங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள். அவள் திறமைகளில் அந்தப் பண்பும் இயல்பாகக் கலந்திருந்தது.

ஆகவே குமாரி செல்வா 'பணக்காரன் மகன் பணக்காரன்' என்ற அந்தஸ்திலே வாழ்ந்து அதை வெளிச்சம்போட்டுத் திரிய விரும்பிய செல்லப்பிள்ளை ராஜாவின் காரில் அடிக்கடி காணப்பட்டாள். சினிமாத் தியேட்டர்களில், ஹோட்டல்களில், கடலோரத்திலே, தன் விட்டு மாடியிலே எல்லாம் ராஜாவின் இணை பிரியாத ஜோடிபோல் திகழ்ந்தாள் அவள்.

ராஜா உண்மையிலேயே கிடைத்தற்கரிய ராணியைப் பெற்றுவிட்ட ராஜா என்றே நம்பினான். செல்வா கணந்தோறும் வியப்புகள் காட்டும் கலை-எழில். காணக் காண நயம் குறையா அமுத நிறைவு. பழகப் பழகப் புதுமை குன்றாத இளமை இன்பம். அன்புடன் பேசி உறவாடி மகிழ மகிழ ஆசையை அடங்கவிடாமல் தூண்டும் அழகுக் காந்தம். அவள் கண் சுழற்சியில், இதழின் கழிவில், இன்பச் சிரிப்பில், மேனி நயத்தில், இளமை விருந்தில், கலை விளையாட்டில் அவன் தன்னையே பறிகொடுத்து விட்டான்.

'நீ ஆட வேண்டியதில்லை. ராஜாவின் ராணியாகவே என்றும்