பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் அம்மன் கோயிலில், ஒரு முறை, தண்ணிர் நிரப்பி வைக்கப் படுகிற 'கிடாரம்' காணாமல் போய்விட்டது. பித்தளையினாலான பெரிய பாத்திரம். ஒருவன் அல்லது இரண்டு பேர் அதை தூக்கிச் சென்றிருக்க முடியாது. துணிந்து எடுத்துப் போய் எங்கு மறைத்து வைப்பார்கள்? தகடு தகடாக வெட்டிச் சிதைத்து, பக்கத்து நகரத்தில் பாத்திரக்கடை எதிலாவது விற்றிருப்பார்கள். இப்படிச் சிலர் சொன்னார்கள். துப்புத் துலக்குகிறோம் என்ற சிலர் எங்கெங்கோ அலைந்து திரிந்தார்கள். அலுத்துப்போய் திரும்பி வந்தார்கள். முடிவாக, பிறவிப் பெருமாள்பிள்ளையிடம் முறையிட்டார்கள். பிள்ளை, மற்றும் இரண்டு பேரோடு, கோயிலுக்குப் போனார். அம்மனுக்கு கர்ப்பூரம் காட்டி விட்டு, அதை பிள்ளை முன்னே கொண்டு வந்து நீட்டினான் பூசாரி. யாரும் எதிர்பாராத காரியத்தை செய்தார் பிள்ளை. கர்ப்பூர சுவாலை மீது கைகளை காட்டி, அவற்றை தன் கண்களில் ஒற்றிக் கொள்ளவில்லை அவர் வெகு பலமாக பூசாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பளார் என்ற ஓசை வெடிச் சத்தமாய் கேட்டது. திகிலடித்துப் போன பூசாரி சூடன் தட்டை கீழே போட்டு விட்டான். அது அவன் பாதத்தில்தான் விழுந்தது. எரியும் கர்ப்பூரம் அவன் காலைக் கட்டது. பூசாரி கன்னத்தைத் தடவுவானா? காலை கவனிப்பானா? யோசித்துச் செயல் புரிவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை பிள்ளை. மறுபடியும் ஓங்கி அறைந்தார் அவனை. "கிடாரத்தை எந்தக் கிணத்திலே ஒளிச்சி வச்சிருக்கலேய்? எங்கே பதுக்கி வச்சிருக்கே, சொல்லு" என்று திரும்பவும் அடித்தார். கதிகலங்கிப் போன அவன், "சொல்லுறேன், முதலாளி, என்னை அடிச்சுக் கொல்லாதீங்க" என்று கதறியபடி அவர் காலில் விழுந்தான். "நீ எதுவும் சொல்ல வேண்டாம். அந்த இடத்தைக் காட்டு" என்று உத்திரவிட்டார் பிள்ளை. “உம். எழுந்து நட" என்று உறுமி G雳育、 . f; பூசாரி நடந்தான். மற்றவர்கள் தொடர்ந்தார்கள். போகப்