பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பது அவர்கள் திட்டம். இதுவும் பூசாரிதான் தெரிவித்தான். அந்த இரண்டு பேரும் அகப்பட்டுக் கொண்டார்கள். மூன்று பேரையும், கழுதைகள் மேல் ஏற்றிவைத்து முகத்தில், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தெருத் தெருவாக ஊர்வலம் வரும்படி பண்ணினார்கள் ஊர்க்காரர்கள், அன்று இரவு பூசாரி ஊரைவிட்டு ஓடிப்போனவன், அப்புறம் மகிழ்வண்ணபுரம் பக்கம் தலைகாட்டவேயில்லை. அதற்காக அந்த ஊரில் யாரும் வருத்தப்படவும் இல்லை. பிறவிப்பெருமாள் பிள்ளை இவ்வாறு கடினசித்தராக நடந்து கொள்ளும் இயல்பு உடையவர் என்றாலும் சில சமயங்களில் சிறுபிள்ளை மாதிரி விளையாட்டும் வேடிக்கையுமாகச் செயல்புரியக் கூடிய சுபாவமும் பெற்றிருந்தார். அந்தப்பெரிய வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது பிள்ளை செய்த ஒரு தமாஷ் தலைமுறை தலைமுறையாகச் சொல்லி மகிழக் கூடிய ஒரு ரசமான விஷயமாக அமைந்தது. அவருடைய அண்ணன் நாறும்பூநாத பிள்ளையின் மனைவி குழல்வாய்மொழிக்கு புதையல் பித்து இருந்தது. தங்கள் குடும்பத்துக்குப் புதையல் கிடைக்கும் என்று அவள் நம்பினாள். எப்போது கிடைக்கும், புதையல் எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்ள அவள் தவித்த தவிப்பு பிறவிப்பெருமாள் பிள்ளைக்கு கேலி செய்யப்பட வேண்டிய ஒரு விஷயமாகப்பட்டது. சோதிடர், குறிகாரர், மைபோட்டுப் பார்த்து விவரங்களைக் கூறும் மத்திரவாதி என்ற பலரகமானவர்களிடமும் அவள் விசாரித்துக் கொண்டேயிருப்பாள். இதற்காக அரிசி, நெல், பணம் முதலிய வற்றை அந்த அம்மாள் தாராளமாக அள்ளி வழங்குவாள். மதினியைக் கேலி செய்யும் உரிமையோடு பிறவிப்பெருமாள் அடிக்கடி அவளைப் பரிகசிப்பது வழக்கம். வீடு கட்டியபோது இது அதிகரித்தது. ஒரு இடத்தில் அடிவானம் தோண்டப் பெற்ற போது பிள்ளை திடீரென்று திருக்குறுங்குடி நொண்டி யானையை கூட்டிக்கிட்டு வா!" என்று மகனிடம் சொன்னார். அவர் அப்படி பெரியம்மாவைத்தான் குறுப்பிடுகிறார் என்பது மகனுக்குத் தெரியும். திருக்குறுங்குடிக் கோயிலில் ஒரு யானை இருந்தது.