பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் கண்ணிர் வடித்தார்கள். வெளியே போனதும், அவரவர் வீட்டிலும் வெளியிலும், எதிர்ப்பட்டவர்களிடம் நீட்டி முழக்கிப் பேசினார்கள். அதைக் கேட்டுவிட்டு, சூடியைப் பார்ப்பதற்கென்றே பலரும் வரத்தொடங்கினார்கள். - வந்தவர்கள் ஆள் ஆளுக்கு ஒன்றைச் சொன்னார்கள். சூடியின் வாயைக் கிளறிவிட முயன்றார்கள். உபதேசித்தார்கள். குறை கூறினார்கள். பழித்தார்கள். இனி என்ன செய்யப் போறியாம் என்று குத்தினார்கள். திடீரென்று நிலைமை மாறியது. எல்லோரும் சூடியிடம் அனுதாபமும் அக்கறையும் கொள்ள நேரிட்டது. யார் என்ன பேசினாலும் வாய்திறவாது தலையை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த சூடி சிரிக்க ஆரம்பித்தாள். வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தாள். தொடர்ந்து அழத் தொடங்கினாள். விம்மி விம்மி அழுதாள். அப்புறம் தலைமுடியை அவிழ்த்துவிட்டுக் கொண்டு, ஒரு மாதிரி விழித்து நோக்கியபடி இருந்தாள். பிறகு மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாள். இவ்வாறு அடிக்கடி செய்துகொண்டிருந்தாள் அவள். வேண்டுமென்று செய்யவில்லை; ஏதோ நோய்க்கோளாறு என்று அனைவருக்கும் புரிந்தது. - வைத்தியர்கள் வந்தார்கள். மருந்துகள் கொடுத்தார்கள். சூடியின் சிரிப்பும் அழுகையும் நிற்கவில்லை. 'இது பேய்க்குத்தம் என்று பெண்கள் சொல்லலானார்கள். சூடியின் சிரிப்பும் அழுகையும் நிற்கவில்லை. பேய் ஓட்டத் தெரிந்தவர் என்று பெயர் பெற்றிருந்த பூசாரிகள், மந்திரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து போனார்கள். பூசை, மந்திரித்தல் என்று அந்த வீடு தடபுடல்பட்டது. சிலர் பேயோட்டுகிறேன் என்று சூடியைப் பிரம்பால் அடித்தார்கள். அவள் சிரித்துக்கொண்டு தானிருந்தாள். தொடர்ந்து அழுதாள். பிறகு மணிக்கணக்கில் கட்டை மாதிரிக் கிடந்தாள். 'இந்த மூதி வீடு தேடி வராமல், ஒரே போக்காப் போயிருந் திருக்கலாம். இவளாலே எனக்குக் கெட்ட பேரும் அவமானமும் தான். மனவேதனையும் பணச்செலவும் தான் என்று தையல்நாயகி புலம்பினாள்.