பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் கொண்டதும், வீட்டுக்குள் ஓடினான். "ஆட்கள் வருது, வண்டி வண்டியா வருது" என்று பதை பதைப்போடு பேசினான் அவன். செல்லம் பண்டிதர் சுதாரித்துக் கொண்டார். சேதி தெரிஞ்சு நம்மை தடுக்கறதுக்குத்தான் ஆட்கள் வாறாங்க. நம்ம பாடு ஆபத்து" என்று அவர் உணர்ந்தார். "ஆச்சி, அபாயம் நெருங்குது. இதை எல்லாம் அப்புறப் படுத்துங்க, சீக்கிரம்" என்று சொல்லி, தகடுகள் தனது மந்திரச் சாமான்கள் முதலியவற்றை அவசரம் அவசரமாக அள்ளி மூட்டையாய் கட்டிக்கொண்டு வெளியேறினார். போகிற போதும் "பூக்கள் சாமான்களை எல்லாம் தோட்டத்துப் பாழ்ங்கிணத்திலே அள்ளிப் போடுங்க" என்று எச்சரிக்கையாய் கூறிவிட்டு, வேகமாய் நடந்து இருட்டோடு கலந்து போனார். தையல்நாயகிக்கும் உள்ளுற பயம் ஏற்பட்டது. சூடியின் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான், விஷயத்தை எப்படியோ கேள்விப்பட்டு, கலகம் பண்ணித் தடுப்பதற்காக ஆட்களைச் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள் என்று அவள் பயந்தாள். விளக்குமாறை எடுத்து அங்கிருந்த அனைத்தையும் கூட்டிப் பெருக்கி, பனைநார்ப்பெட்டி ஒன்றில் அள்ளி அமுக்கினாள். அருகில் நின்ற புன்னைவனத்திடம் கொடுத்து, "இதை தோட்டத்துக் கிணத்திலே கொட்டிட்டு வா, ராசா. நல்ல பிள்ளையில்லா!" என்று கொஞ்சலாகவும் கெஞ்சலாகவும் சொல்லி அனுப்பிவைத்தாள். அவனும் பயந்து கொண்டே போய், பாழுங்கிணற்றில் பெட்டியோடு போட்டுவிட்டு, திரும்பிப் பாராமல் ஓடிவந்தான். அவன் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. வாசல்படி அருகே வந்ததும், அவன் 'து து என்று எச்சிலை துப்பிவிட்டு வீட்டுக்குள் புகுந்தான். அப்போதுதான் வாசலுக்கு முன்னால் வண்டிகள் வந்து நின்றன. ஆண்களும் பெண்களுமாகப் பலர் இறங்கினார்கள். தையல்நாயகி, வாங்க, வாங்க என்று வரவேற்பதற்குக்கூட வாய் வராதவளாய் திகைத்து நின்றாள். "என்ன அக்கா இப்படி நின்னுட்டே? நாங்கதான்" என்று சிரித்துக் கொண்டே முன் வந்தார் ஒருவர். - அம்மாள் திடீர் விழிப்புற்றவள் மாதிரி, சமாளித்துக்