பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் உரிய சாத்தா மகிழ்வண்ணபுரத்திற்குத் தெற்கே ஒரு மைல் தள்ளியிருந்த மாந்தோப்பில் இடம் பெற்றிருந்தது. நேர்த்திக் கடனை தீர்த்து பொங்கல் வைத்துப் பூசை பண்ணுவதற்காக அந்தக் குடும்பம் இந்தச் செவ்வாயன்று வந்திருக்கிறது. நேரம் ஆகிவிட்டபடியால், குடும்பத் தலைவர் சொன்னதுபோல அக்காள் வீட்டில் இராப் பொழுதைக் கழிக்கும் நோக்கத்துடன் வீடு தேடி வந்தது. அந்த நேரம் ஒத்தை வீட்டின் போதாத நேரம் ஆக அமைந்திருந்தது! மாவு இருக்கு. தோசை கட்டுத் தாறேன். எல்லாரும் சாப்பிடுங்க" என்று தையல்நாயகி உபசரித்தாள். வேண்டாம் வேண்டாம்" என எல்லோரும் மறுத்து விட்டனர். "தோப்பிலே வச்சு பொங்கல் சாப்பிட்டுதான் புறப்பட்டோம். சர்க்கரைப் பொங்கல் மிச்சமிருக்கு. நீங்களும் சாப்பிடலாம். ஏ மீனாட்சி, சர்க்கரைப் பொங்கலை எடுத்துக் கொடு" என்று நல்லகண்ணுப்பிள்ளை கூறினார். மீனாட்சி பொங்கல் பானையை எடுத்தாள். "இன்னிக்கு விரதம். சூடிக்கு விபூதி மந்திரிச்சுப் பூசினோம். அதுதான். சாம்பிராணி வாசனை இருக்கு," என்று அம்மாள் தெரிவித்தாள். - - இருந்தாலும், பிள்ளை விடவில்லை. "சர்க்கரைப் பொங்கல் தானே. கோயில் பிரசாதம். சும்மா சாப்பிடலாம்" என்று சொல்லி, அனைவருக்கும் விநியோகித்தார். அன்று இரவில் எல்லோரும் படுத்துத் துங்குவதற்கு வெகுநேரம் ஆயிற்று. அதிகாலையில், வெளிச்சம் நன்றாகப் பாய்ந்து பரவுவதற்கு முன்னதாகவே, நல்ல கண்ணுப் பிள்ளை எழுந்து, அனைவரையும் எழுப்பி விட்டார். வண்டிகளைத் தயார் பண்ணி பிரயாணத்துக்கு ஆயத்தமானார். "இருந்து, சாப்பிட்டுட்டுப் போங்க. இப்பவே என்ன அவசரம்?" என்றாள் தையல் நாயகி. “வந்தாச்சு, பார்த்தாச்சு பின்னே என்ன? சீக்கிரம் போனால் சோலிகளை கவனிக்க முடியும்" என்று கூறி பிள்ளை புறப்பட்டுப் போனார். வண்டிகள் மறைந்ததும், தையல் நாயகி பெருமூச்சு விட்டு, "ராத்திரி சனியன் மாதிரி வந்து காரியத்தைப் பாழாக்கிப் போட்டான்" என்று கசந்து கொண்டாள். அவளது மனக்கசப்பும்