பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பூத்து ஆள் விலாசமே இல்லாமப் போயிருவே. ஆமா" என்று கத்தினான் ஒரு நபர். - உயிரோடு திரும்பினால் போதும் என்று எண்ணி, வேகமாக நடந்தார் சாமியார். தங்கள் வீரதீரச் செயலை விளம்பரப்படுத்து வதற்காக உற்சாகமாக நடந்தார்கள் இளைஞர்கள். ஆனால் ஒரு மாசத்துக்குப் பிறகு, அவர்கள் நினைத்திராத காரியம் நடந்தது. சூடிக்கொடுத்த நாச்சியார் மதுரைக்குப் போய்விட்டாள் என்று அவர்களுக்குத் தெரிய வந்தது. சாமியார் நடந்த விவரத்தை அவளுக்குக் கடிதம் மூலம் தெரிவித்து விட்டார் என்றும், அவர்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது என்றும், அவரே திட்டம் வகுத்துக் கொடுத்து அவளை வரவழைத்துக் கொண்டார் என்றும் தெரிந்தது. "கெட்டலைஞ்ச கழுதை! ஒரு தடவை ஓடிப்போனது, கட்டிப்போட்ட மாதிரி வீட்டோடவா கிடக்கும்? சவம், அது புத்தியைக் காட்டிவிட்டது" என்று காறித் துப்பினார்கள் அவர்கள். "சாமியான் நமக்கு பட்டை நாமத்தைக் குழைச்சுப் போட்டுட்டானே! எமப்பளுவன்தான்" என்று ஒருவர் சொன்னார். "இப்போ தப்பிட்டான். இன்னொரு சமயம் வசமா வந்து சிக்குவான்" என்று கறுவினான் இன்னொருவன். வெயிலும் கொதிப்புற்றிருந்தான். "அடுத்த தடவை வீடு தேடி வரட்டும். அவ காலை முறிச்சு அவள் கையிலே கொடுக்கறேன். ஒடு காலி!” என்று சூளுரைத்தான் அவன். o பையன் பெரியவன் ஆகிவிட்டான் என்று புரிந்து கொண்டாள் தாய். இந்து வெயிலுகந்தநாதன் பெரியவனாகிக் கொண்டிருந்தான். அனைத்தையும் வேடிக்கை பார்க்கிற சின்னப் பையனாக வளர்ந்தவன்தான் அவன். வீடு கட்டியதை வேடிக்கை பார்த்தான். புதையல் கிடைக்கும் என்று அப்பா விளையாட்டாகச் சொன்னதை நம்பிக்கொண்டிருந்தான். கட்டப்பெற்ற வீட்டில் ஒரு அறையில்