பக்கம்:ஒரே இரத்தம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றின. வண்டிக்காரரின் மீசைகள் படபடத்தன. அங்கங்கள் பத 'டேய்! நீ, அந்த மாரிப் பயலோட மகனா? நீயா என் வண்டியிலே வந்து பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளை மாதிரி உக் காந்துகிட்டே! அடக் கடவுளே! என் பக்கத்திலே வேற நெருங்கி உட்கார்ந்து என்னையும் தீட்டாக்கித் தொலைச்சுட்டானே! இறங்குடா கீழே! இறங்கு! படிச்ச திமிராடா உனக்கு? பஞ்சமன் வீட்டிலே பிறந்துட்டு கொஞ்சம் கூடப் பயமில்லாமல் வண்டிச் சவாரியா கேக்குது! ராஸ்கல்! இறங்குடா!” - ஆவேசத்தால் வண்டிக்காரர் குதித்தார். நந்தகுமார் வண்டியிலிருந்து இறங்கவில்லை. அவன் நரம்புகளில் நெருப்பு ஆறு ஓடிக்கொண்டிருந்தது! இதயத் துடிப்புக்கள், அடிகள் போல் நெஞ்சில் விழுந்துகொண்டிருந்தன. "இப்ப கீழே இறங்குறியா இல்லையா?" “முடியாதய்யா முடியாது!" "முடியாதா? வண்டிக்காரர், மாடுகளை அவிழ்த்து விட்டார். சம்மட்டி அப் அடுத்த விநாடி, வண்டியின் முனையைப் பிடித்து படியே தலைகீழாகத் தூக்கிவிட்டார். கூடை, பெட்டிகளுடன் நந்தகுமார், வண்டியோடு கீழே விழுந்து உருண்டான். தீட்டுப் பட்டுவிட்ட பாபத்தைக் கழுவிக்கொண்டு தூய்மையாவதற் காக சாலையோரத்தில் இருந்த குட்டையில் இறங்கி வண்டிக் காரர் அவசர அவசரமாகக் குளித்தார். அந்தக் குட்டையில் ஒரு எருமை மாடும் விழுந்து புரண்டு குளித்துக்கொண்டிருந் தது. வண்டியிலிருந்து உருண்ட நந்தகுமார், தன்னுடைய கையி லும் முகத்திலும் பட்டுவிட்ட சகதியினைக் கழுவிக்கொள்ள குட்டையில் இறங்கப் போனான். “டேய்! சண்டாளப் பயலே! இது புண்ய தீர்த்தம்டா! பழைய காலத்து ஐதீகக் குளம் தொடாதே! ஏறுடா கரையிலே!" - இந்தத் தண்ணியைத் என்று வண்டிக்காரர் அதட்டிக்கொண்டே அங்கு கிடந்த ஒரு கழியை எடுத்து குமாரின் தலையை நோக்கி ஓங்கினார். நந்த 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/11&oldid=1702161" இலிருந்து மீள்விக்கப்பட்டது