பக்கம்:ஒரே இரத்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 செ ம்பருத்திப் பூப்போல கிழக்குத் திசையில் உதயஞாயிறு மலர்வதற்கு முன்பே அம்பல் கிராமத்து விவசாயத் தொழி லாளர்கள் தங்கள் உழவுக் கருவிகளுடனும் மாடுகளுடனும் கழனிகளுக்குக் கிளம்பிவிட்டனர். கோழி கூவுவதற்கு முன்பே எழுந்து வயலில் குழம்பியுள்ள சேற்றினைக் கரைத்து வைத்த சந்தனம்போல் தங்கள் கால்களிலும் கைகளிலும் பூசிக்கொள்கிற உழவர் வர்க்கமல்லவா? வரப்புக்களின் ஒற்றையடிப் பாதையில் காலை இளங்காற்று வாங்குவதற்காக வந்து அமர்ந்திருக்கிற சின்னச் சின்ன நண்டுகள் அந்தப் பாட்டாளிகளின் பாத ஒலி கேட்டு மின்னல் வேகத்தில் ஓடிப் பதுங்கிக்கொள்வதும் உண்டு. அவர்களது கால்களில் தவறுதலாக மிதிபட்டுவிட்ட நச்சுப் பாம்புகள், அவர்கள் மீது சீறி விழுந்து கடித்துவிடுவதும் உண்டு. கலப்பைகளைத் தோளில் ஏந்திச் செல்வோரும், மாடுகளை ஓட்டிச் செல்வோரும், பரம் படிக்கும் பலகைகளைச் சுமந்து செல்வோரும் கூட்டமாகச். சேர்ந்து வந்தாலும் கூட அவரவர்கள் வேலை செய்யும் கழனி களுக்கருகே வந்ததும் பிரிந்து சென்று தத்தம் கடமைகளை ஆற்றிட வயல்களுக்குள் வயல்களுக்குள் இறங்கிவிடுவர். அந்த உழைக்கும் தெய்வங்கள்தானே உலகத்து மக்களின் வாழ்வுக்கு அருள்பாலிக்கக் கூடியவை! உப்பரிகையின் உச்சி மாடியிலே அமர்ந்து கிச்சிலிச்சம்பா அரிசியில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலைத் தன் பிரியத் துக்குரியவள் இதழ்களிலே விரல்படும் அளவுக்கு வாயிலே ஊட்டிவிட அந்தச் சுவையையும் அவளின் அதரச் சுவையையும் ஒப்பிட்டுக் கவிதை மொழியில் பேசுகிறானே, சீமான் வீட்டுப் பிள்ளை அவனுக்குத் தெரியாது, அந்தப் பொங்கல் அரிசியை விளைவித்துத் தர வியர்வை சிந்திய பட்டாளம் ஒன்று நடு வீதிகளிலே படுத்துறங்குகிற காட்சி! சன்ன ரக நெல்லை விளைவித்துக் கொடுக்கும் அந்த ஏழை களின் கூட்டத்திற்குச் சில நேரங்களில் மோட்டா ரக அரிசி கூடச் சாப்பாட்டுக்குக் கிடைப்பதில்லை. 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/12&oldid=1702162" இலிருந்து மீள்விக்கப்பட்டது