பக்கம்:ஒரே இரத்தம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று நேற்றல்ல, இப்படி எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊரின் ஒதுக்குப்புறங்களில் ஓட்டைக் குடிசைகளில் தேள் களோடும் பூரான்களோடும் பாம்புகளோடும் போராடிக் கொண்டு - நோய் நொடிகளை ஆண்டவன் தரும் பரிசுகளென எண்ணிக்கொண்டு அம்மை காலரா, போன்ற தொத்து வியாதிகளுக்கு அற்ப ஆயுளில் பலியானால்கூட காளியும் மாரியும் விரும்பி அழைத்துக் கொண்டார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்துவரும் பரிதாபத்திற்குரிய சமுதாயமல்லவா அது! தங்களின் நலனுக்காக உழைப்பவர்களைக்கூடப் புரிந்து கொள்ள முடியாமல் - ஏதோ தெய்வத்துக்கும். ஏதோ தெய்வத்துக்கும் சாஸ்திர சம்பிர தாயங்களுக்கும் விரோதமான காரியங்களுக்குத் தங்களைத் தூண்டிவிட்டுப் பாபக கடலில் தள்ளப் பார்க்கிறார்கள் என்று நடுங்கிக்கொண்டுதானே அவர்கள் வாழ்வை நகர்த்தி பயந்து னார்கள். இப்போது கூட அவர்கள் வாழ்க்கையில் கோழி கூவியிருக் கிறதே தவிர இன்னும் வைகறைப்பொழுதேகூட வரவில்லையே! அதன் பிறகல்லவா விடிய வேண்டும்! ஒளியினைக் காணவேண்டும்! மிகத் இருண்டு கிடக்கும் மலைப்பகுதியில் அங்கொன்றும் இங் கொன்றுமாக சிறு சிறு அகல் விளக்குகள் எரிவதை தொலைவில் இருந்து பார்த்தால் பெரிய இடைவெளியினூடே வானத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப் போலத் தெரியு மல்லவா; அப்படித்தான் அந்தச் சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய விண்மீன்கள் நம கண்களுக்குத் தெரிகின்றன. பாடுபடும் அந்தப் பெருங்கூட்டம் மட்டும் இல்லாவிட்டால் மனித இனத்தின் முதல் தேவையான உணவு என்பதே, ஏதோ காடுகளில் கிடைக்கிற காய்கனிகள் என்ற அளவோடு நின்று போயிருக்கும். அதோ ஏற்றச்சால் தண்ணீரை மொண்டுகொண்டு மேலே புறப்படுகிறது. அது, தானாகவா அந்தப் பணியைச் செய்கிறது! வலுவான இரண்டு கரங்கள் அந்த ஏற்றச்சாலைக் கீழே தண் ணீரை நோக்கி அழுத்துகின்றன. திடமான தேகக்கட்டு கொண்ட ஒரு வாலிபனின் கரங்கள். "பார் முழுதும் ஏர்முனையிலே உழ வன் பாட்டிலே கொண்டாட்டம் போடுது” என்ற உடுமலை நாராயணக் கவியின் பாடலைத் தன் இஷ்டத்துக்கு மெட்ட மைத்துக்கொண்டு ஓங்கிய குரலில் ஒலித்தவாறு இறைத்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். ஏற்றம் அவன் வேலையின் பளுவைச் சிறிது குறைக்க ஏற்றத்தின் மேல் உள்ள நீண்ட கம்பின் மீது ஒருவன் மேலும் கீழுமாக நடந்துகொண்டிருந்தான். ஏற்றம் இறைக்கும் வாலிபன் வளர்ந்து வாட்டசாட்டமாகக் காட்சியளித்தான். வேட்டியைத் தொடைக்கு மேலே வரிந்து கட்டிக்கொண்டிருந்தான். ஏற்றச்சாலை அவன் மேலும் கீழுமாக இழுக்கும்போது தொடையின் தசைகள் மினுமினுப்போடு முரடு கட்டிக்கொண்டு 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/13&oldid=1702163" இலிருந்து மீள்விக்கப்பட்டது