பக்கம்:ஒரே இரத்தம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணத்திற்கான வேலைகளைத் தொடங்க பண்ணையார் தயாராகி விட்டார். சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை கொண்டோர் அனை வரும் விழாவுக்கு வந்திருந்தனர். இந்தத் திருமண நிகழ்ச்சிகள், அந்தப் பகுதி முழுவதிலுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மணமக்கள் தங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டபோது பண்ணையார் மணப்பந்தலில் எங்கோ ஒரு மூலை யில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு மேலுக்கு மகிழ்ச்சியாக இருப் பதுபோல் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். சோமுவும் வேணியும் ஆடியோடி திருமண நிகழ்ச்சிகளைக் கவனித்தனர். விழா இனிது முடிவுற்று, வருகை தந்தோர் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். பண்ணையார், தன்னுடைய புனித மான கொள்கைகளுக்கு மகத்தான தோல்வி ஏற்பட்டுவிட்ட தாகவே எண்ணினார். அதன் விளைவு என்ன? திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மகேஸ்வரனும் செங்கமலமும் சென்னைக்குப் புறப்பட்டனர். காமாட்சியும் பொன்னனும் கூட சென்னையில் மகேஸ்வரன் வீட்டிலேயே தற் காலிகமாகத் தங்குவது என்று முடிவாயிற்று. அந்த ஏற்பாடுகளைக் கவனிக்க சோமுவும் வேணியும் நந்தகுமாருடன் முன்கூட்டியே சென்னைக்குச் சென்றனர். பண்ணையார் வீட்டு வாசலில் மகேஸ்வரனின் கார் நின்று கொண்டிருக்கிறது. மகேஸ்வரன், காரின் முன் இடத்தில் அமர்ந்து காரை ஓட்டத் தயாராகிறான். அவனுக்கருகே செங்கமலம் வந்து அமர்ந்து கொள்கிறாள். பொன்னன், காரின் பின்னால் உள்ள இருக்கையில் வந்து உட்காருகிறான். காமாட்சி, குழந்தையுடன் வந்து அவன் பக்கத்தில் உட்காருகிறாள். மாரி, காருக்கு வெளியே நின்று அவர்களை வழியனுப்பி வைக்க காத்துக்கொண்டு இருக்கிறார். காரில் உள்ளவர்கள், வீட்டின் உள்பக்கம் திரும்பி கைகளை அசைத்து விடைபெற்றுக் கொள்கிறார்கள். வீட்டுத் திண்ணையிலிருந்தவாறு பார்வதியம்மாள் கையசைத்து அவர்களுக்கு விடைகொடுக்கிறாள். அவள் முகத்தில் புன்னகையில்லை! புன்னகை மட்டுமா இல்லை? பொட்டில்லை நெற்றியில்! பூவில்லை தலையில்! காரணம்; அவள் கழுத்தில் மாங்கல்யம் இல்லை! காமாட்சி - - - பொன்னன், செங்கமலம் மகேஸ்வரன் ஆகிய இரு இணைகளையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு கார் புறப்படுகிறது. ( முற்றும் ) 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/135&oldid=1702555" இலிருந்து மீள்விக்கப்பட்டது