பக்கம்:ஒரே இரத்தம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விம்மிப் புடைத்தன. சட்டையணியப் பெறாத அவனது அகன்ற பலகை போன்ற மார்பகம் மேலும் விரிந்து, புஜங்களும் வீங்கிப் புடைத்தன. கறுத்திருந்த அவன் முகத்தில் அளவான மீசைகள், உதடுகளின் எல்லையைச் சிறிது தாண்டி சற்று வெளியே தலையை நீட்டிக்கொண்டிருந்தன. மீசையின் முனைகள் திருகிக் கூராக விடப்பட்டிருந்ததால் இரு மிளகாய்களை உதட் டுக்கு மேலே பொருத்தியது போல் இருந்தது. “பொன்னா! பொன்னா!" என்று குரல் கேட்டு, 66 பினான். "கூப்பிட்டிங்களாப்பா” என வினவியபடி அவன் திரும் அந்தக் கருக்கல் நேரத்திலும் அவன் தந்தை மாரி, கையில் ஒரு மண்வெட்டியுடன் வரப்பு மேலே நின்றது அவ னுக்குத் தெரிந்தது. தண்ணி இறைச்சது போதும். பாக்கியிருக்கும் மடை களை நி கோலிவிடு. நான் அந்த நாற்றங்கால் பக்கம் போயி, நடவாளுங்க வந்துட்டாங்களான்னு பாத்துட்டு வர்ரேன்.” மண்வெட்டியை வரப்பின் மேல் போட்டுவிட்டு மாரி, நாற்றங்காலை நோக்கி நோக்கி நடந்தார். பொன்னன் முண்டாசை அவிழ்த்து மீண்டும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு வரப்பில் கிடந்த மண்வெட்டியைத் தூக்கி மடைகளைக் கோலித் கோலித் தண் ணீரைக் குறிப்பிட்ட அளவு வயல்களுக்குப் பாயவிடத் தொடங்கி னான். நாற்றங்கால் பக்கம் சென்றுகொண்டிருந்த மாரியின் மனம் முழுவதும் வீட்டிலேயே இருந்தது. அதைப் போலவே பொன்னனின் இதயமும் அம்பல் ஹரிஜனக் காலனியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இன்றுதான் நந்தகுமார் வரும் நாள்! மகனைப் பார்க்க மாரியின் நெஞ்சம் துடித்துக்கொண் டிருந்தது. தம்பியைக் காண பொன்னனின் கண்கள் அலைந்து கொண்டிருந்தன. ஆனால் இருவருமே கடமையைத்தான் முதலில் கருதினர். இல்லாவிட்டால் இருவரில் ஒருவர் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்குப் போய் நந்தகுமாரை வரவேற்று அழைத்து வந்திருப்பார்களே! - - வேலை படிக்கிற பையன் தானே பாதையா தெரியாது களை விரைவாக முடித்துவிட்டு வீட்டுக்கு ஓடிவந்து அவனைப் பார்க்கிறோம் என்று கூறிவிட்டுத்தான் அவர்கள் வயலுக்கு ஓடி வந்தனர். பாட்டன் பூட்டன் காலத்திலேயிருந்து அம்பல் பண்ணை யில்தான் மாரியின் குடும்பம் உழைத்து வருகிறது. இப்பொழு துள்ள பண்ணைக்காரர் பரமேஸ்வரன் ஆச்சார அனுஷ்டானங் கள், நேமநிஷ்டைகள் அனைத்திலும் பிரசித்தி பெற்றவர். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/14&oldid=1702164" இலிருந்து மீள்விக்கப்பட்டது