பக்கம்:ஒரே இரத்தம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இ 3 ருளா! இடும்பா! சடையா! சப்பாணி!” என்று மாரி, உரக்க ஒலியெழுப்பியது கேட்டு கழனிகளின் பல்வேறு பகுதி களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அங்கே வந்து சூழ்ந்துகொண்டார்கள். ஏதோ தீண்டிவிட்டது என்ற அதிர்ச்சி கலந்த சந்தேகமும் அச்சமும் அவர்களை வாய்க்கால் வரப்புக்களைத் தாண்டிக் குதித்து அங்கு ஓடிவரும்படி செய்தன தகப்பனார் வழக்கத்திற்கு மாறாக எல்லோருக்கும் அழைப்பு விடுத்துக் கூச்சலிடுவதைக் கேட்டுத் திகைத்துப்போன பொன் னனும், ஏற்றச்சாலை விட்டுவிட்டு மடை கோலிக் கொண்டி ருந்தவன் பதைபதைக்க அங்கு வந்து சேர்ந்தான். அதோ பாருங்க... அந்தத் தாழங்காட்டுக்குப் பக்கத் திலே தங்க விக்ரகம் மாதிரி என்று மாரி, வியப்பும் பர பரப்பும் காட்டி; ஓடிவந்தவர்களின் பார்வையை அங்கு வீறிட்டு அழுதுகொண்டிருந்த பச்சிளங் குழந்தையின் பக்கம் திருப்பினார். என்னாது அதிசயம்?" S "யாரு குழந்தைடா இது? 6 5 கதையிலதான் கேட்டிருக்கோம், வள்ளித் திருமணத்திலே வள்ளிக்கிழங்குத் தோட்டத்திலே குழந்தையா கண்டெடுத்தான்னு!” 85 நம்பிராஜன் வள்ளியை 'OJ GOT, ஜனகமகாராஜன் சீதையைக்கூட குழந்தையா வயல்லே தானே கண்டெடுத்தாரு - முந்தாநாள் சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்திலே ஆடினாங்களே; பாக்கலியா?" 'ஆழ்வார் ஒருத்தரு ஆண்டாளம்மனைக்கூட இப்படித்தான் புதருக்கிட்டே கண்டெடுத்தாருன்னு... நம்ம ஊர் நம்ம ஊர் கோயில்ல பாகவதர் ஒருத்தர் கதை சொன்னதைப் போன மாசம் லவுட் ஸ்பீக்கரிலே வெளியில் தொலைவா இருந்து கேட்டோமே; மறந்து போச்சா? 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/17&oldid=1702172" இலிருந்து மீள்விக்கப்பட்டது