பக்கம்:ஒரே இரத்தம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சரிப்பா! ஆளுக்கு ஆள் பேசிக்கிட்டே கதை சொல்லிக் கிட்டு இருக்கீங்களே... பாவம் அது பச்சை மண்ணு வீர் வீர்ன்னு தொண்டை காய கத்துதே! என்றவாறு குழந்தையின் அருகே நெருங்கினாள் ஒரு வயதான கிழவி! 'பர்வதம் பாட்டி! வேண்டாம் வேண்டாம். அது பெரிய ஜாதிக்காரங்க வீட்டுக் குழந்தையா இருக்கப்போவுது. நம்ப போயித் தொடரது மகாப் பாவம்! தொடாதிங்க! தொடா திங்க!” என்று அலறினார் மாரி. அட சும்மா கிட மாரி! ஆபத்துக்குப் பாபமில்லே! குழந்தை இன்னம் கொஞ்ச நேரம் கத்துச்சுன்னா நாக்கு வரண்டு செத்துப் போய்டும்.” பர்வதப் பாட்டி குழந்தையைத் தூக்குவதற்கு நெருங்கிச் சென்று குனிந்தாள். மாரிக்கும் மற்றவர்களுக்கும் இதயத் துடிப்புக்கள் பலமாக அடித்துக் கொண்டன. குழந்தையைத் தூக்குவதற்காகக் குனிந்த கிழவி, "ஏ! சாமி! பாம்பு! பாம்பு!' என்று கத்திக்கொண்டு பின்வாங்கி ஓடிவந்து ஒரு கல்லில் இடறிக் கீழே விழுந்தாள். மாரியுட்பட அனைவரும் குழந்தை படுத்திருக்குமிடத்தை உற்றுப் பார்த்தார்கள். குழந்தைக்கு மிக அருகே ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பாம்பு தன் தலையைத் தூக்கிப் படமெடுத்து நின்றது. “நான் சொன்னேன் பாத்தியா! இது ஏதோ தெய்வச் செயலாதான் இருக்கணும். என்னமோ நம்ப ஊரிலே இவ்வளவு பெரிய அதிசயம் நடக்குது. கிருஷ்ணபகவானுக்கு பாம்பு குடை பிடிச்சது மாதிரியில்லே இருக்கு." ஆமாம்! அது, குழந்தையைக் கடிச்சுதுன்னா அதையும் பாத்துக்கிட்டு நிக்கிறதா?' இதற்குள் பொன்னன் தாழம் புதருக்கருகே ஒரே தாண் டாகத் தாண்டினான். படமெடுத்து நின்ற பாம்பின் பின்புறமாகச் சென்று தனது வலது கையால் அதன் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துத் தூரத்தில் வீசி எறிந்தான். ஒரு மேட்டின் மீது விழுந்த பாம்பு, தனக்கேற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்துக்கொண்டு வேகமாக ஓடித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு புற்றில் புகுந்துகொண்டது. குழந்தையைத் தொட்டுத் தூக்குவதா இல்லையா என்ற கேள்விக்கு, பதில் மட்டும் இன்னும் கிடைக்க வில்லை. 'மாரி! என்ன அங்கே கூட்டம்?" 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/18&oldid=1702173" இலிருந்து மீள்விக்கப்பட்டது