பக்கம்:ஒரே இரத்தம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பீரமான ஒரு குரல் ஒலித்தது. கூட்டத்தார் கூனிக்குறுகி, குரல் வந்த திக்கை மரியாதை யுடன் நோக்கினர். பண்ணையார் பரமேஸ்வரன்தான் வந்துகொண்டிருந்தார். அவர் நடந்து வரும் வரப்பின் மீது தாங்கள் நின்றுகொண் டிருப்பதுகூட மரியாதைக் குறைவான காரியமென்றும், சாத் திரத்திற்கு விரோதமானதென்றும் திட்டவட்டமாகக் கருதுகிற மாரியும் மற்றவர்களும், வரப்பை விட்டு இறங்கி நீர் தேங்கிய வயல்களில் நின்றுகொண்டு தலையில் கட்டியிருந்த முண்டாசுத் துணிகளை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ‘எஜமான்!” என்று பயபக்தியுடன் உச்சரித்தனர். "' விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள வினாக்கணை தொடுப்பதற்கு முன்பே தாழங்காட்டிலிருந்து கிளம்பிய குழந் தையின் அழுகுரல் அவரை நகரவொட்டாமல் நிலைபெற்று நிற்க வைத்துவிட்டது. ‘‘எஜமான்! பொன்னனுக்கிட்டே மடையைக் கோலச் சொல்லிட்டு நடவாளுங்க வந்துட்டாங்களான்னு பாக்கிறதுக் காக இந்தப் பக்கம் வந்துகிட்டு இருந்தேன். கருக்கல் நேரத் திலே கருப்பா ஒரு உருவம். பொம்பளை உருவந்தாங்க. திடீர்னு தோணுச்சு. யாரதுன்னு கேட்டேன். தேவதை மாதிரி அப் படியே யே ஆகாயத்திலே மறைஞ்சு போச்சுங்க. எனக்கு ஒண்ணும் புரியலே. நெஞ்சை அடைக்கிற மாதிரி இருந்துச்சு. அப்பறம் என்னடான்னா வீர்’”ன்னு ஒரு சத்தம்! பாத்தா குழந்தை! எல்லாரையும் கூப்பிட்டேன். இந்தக் கிழவி, குழந்தையைத் தூக்கப் போச்சிங்க எஜமான்! வேண்டாம் தொடாதே! பெரிய ஜாதிக் குழந்தையா இருக்கப்போவுதுன்னு சொன்னேன். தடுத்தேன். கிழவி என் பேச்சைக் கேக்காம தூக்கப் போச்சுங்க! உடனே நாகப்பன் படமெடுத்து ‘உஸ்’ஸுன்னு சீறிக்கிட்டு வந்துட்டான். குழந்தையை நாங்க யாரும் தொடலிங்க!... அதுக்குள்ளே எஜமான் வந்துட்டீங்க!’” வக் மாரி, நடந்தவற்றைச் சொல்லி முடித்துவிட்டு ஒரு தெய் குழந்தையை ஏதோ ஒரு தேவதை கொண்டு வந்து அந்த ஊருக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறது என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் பண்ணையாரின் முகத்தைப் பார்த்தார். பரமேஸ்வரன், மெல்ல நடந்து சென்று குழந்தையைக் கம்பளியுடன் கையில் தூக்கினார். 66 அவரையறியாமல் அவரது வாய் 'ஆண் குழந்தை” என்ற செய்தியை ஒலிபரப்பியது. குழந்தையின் முதுகுக்கும் கம்பளிக்குமிடையில் ஒரு துண்டுத்தாளில் நீல வண்ண எழுத் துக்கள் மின்னிக்கொண்டிருந்தன. அந்த எழுத்துக்கள் கையால் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/19&oldid=1702174" இலிருந்து மீள்விக்கப்பட்டது