பக்கம்:ஒரே இரத்தம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதப்பட்டிருந்தாலுங்கூட விளங்கின. தனித்தனி எழுத்துக்களாக பண்ணைக்காரப் பரமேஸ்வரன் அதை உரக்கப் படித்தார், “இது கடவுளின் பிள்ளை. எடுத்து வளர்ப்பவர் வீட்டில் எல்லா வளமும் பெருகும். ஊருக்கே செழிப்பு உண்டாகும். வளர்க் விழிகளை அகல விரித்துக்கொண்டு மாரியையும் மற்றவர் களையும் பார்த்து ‘என்னப்பா சொல்கிறீர்கள்? யார் சிறீர்கள்? ஆண்டவனின் குழந்தையாம் அப்பா! அஷ்டலட்சுமி யும் வந்து கொஞ்சுவாள்! யாராவது தயாரா இருக்கீங்களா?' என்று முகமலர்ச்சியுடன் பண்ணையார் கேட்டார். € 3 எங்களுக்கு ஏன் . எஜமான்? எங்க வீட்லதான் ஏழு எட்டுக்குக் குறையாம நண்டும் சுண்டுமா கிடக்குதுங்களே! அதுவும் தெய்வாம்சம் பொருந்தின குழந்தை! நம்ப ஊருக்கே ஒரு அதிர்ஷ்ட தேவதையா வந்து குதிச்சிருக்கு. உங்க வீட் டிலே வளரவேண்டிய கலியுகக் கிருஷ்ண பரமாத்மாங்க இது எல்லோரும் ஏகமனதாக எழுப்பிய ஒலியைப் பண்ணைக் காரப் பரமேஸ்வரன் ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை. தன் பெரிய விழி குழந்தையின் முகத்தை ஆவலுடன் களால் அவர் விழுங்கினார். மொட்டவிழாத செந்தாமரை யொன்றைத் தன் இரு கரங்களால் தாங்கிக்கொண்டிருப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு. முகப்பொலிவு, நிறம்,அழகு, எல்லாமே அது தெய்வீக மகாத்மியத்தில் கிடைத்த அற்புதக் குழந்தையாகவே அவருக்குத் தோன்றியது. "எனக்கும்தான் பிள்ளையில்லைங்கிற குறை கிடையாது! மகேஸ்வரன், காமாட்சி ஆசை தீர ஆண் ஒண்ணு, பெண் ஒண்ணு இருக்கு! இதை வேற எங்கேயாவது பிள்ளையில்லாதவுங்க கொடுத்தா என்னப்பா?" வில்லை. பண்ணையாரின் இந்தக் கருத்தை யாரும் ஒப்புக்கொள்ள 'தெய்வம். பிள்ளையில்லாதவங்க தவங்க வீட்டிலேயா போய் பிள்ளையா பொறந்திருக்கு? உங்க கண்ணி படணும்னுதானே கடவுளே விரும்பியிருக்கார்! இல்லேன்னா பர்வதம் பாட்டி போயி குழந்தையைத் தூக்கும்போது பாம்பு வந்து தடுக்குமா? எஜமான்! பலவான் செயலை யாரா கண்டுபிடிக்க முடியும்? இந்த விக்ரகம் எங்க ஏழை பாழைங்க வீட்ல, அதிலியும் தாழ்ந்த ஜாதிக்காரங்க வளரக்கூடியதுங்கனா? இதுக்குப் பொருத்தமான இடம் எஜமான் வீடுதாங்க! எஜமான் வாழ்ந்தா நாங்கள்ளாம் வாழப்போறோம். இந்த ஊர் வாழப் போகுது மாரி, பத்திப் பரவசத்தோடு பேசிக்கொண்டேயிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/20&oldid=1702175" இலிருந்து மீள்விக்கப்பட்டது