பக்கம்:ஒரே இரத்தம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வைரக்கம்மல்கள் இரண்டு, வைரமூக்குத்தி, பதினைந்து அவற்றைப் பொன்னன் திரும்பத் சவரன் பவுன் நாணயங்கள் திரும்பப் பார்த்தான். - தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதைத் திண்ணமாகத் தெரிந்துகொண்ட பிறகு அவற்றை அந்தச் சுருக்குப் பையிலேயே போட்டு முடிந்துகொண்டு மடியில் இழுத்துக் கட்டிக்கொண்டான். என்ற தம்பி நந்தகுமார் ஊரிலிருந்து வந்திருப்பான் நினைவு. அவனை வீட்டை நோக்கி விரட்டியது. நந்தகுமார் வரு கைக்காக இரவெல்லாம் சரியாகக்கூடத் தூங்காமல் அவன் அக்காள் செங்கமலமும் தாயார் அஞ்சலையும் அடிக்கடி விழித் துக்கொண்டு பொழுது விடிந்துவிட்டதா என்று ஒருவரை யொருவர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மாரியும் பொன்னனும் வயலுக்குப் போனபிறகு அஞ் சலையும் செங்கமலமும் தங்கள் சிறிய வீட்டின் வாயிற்படி யருகே உட்கார்ந்து வழிமேல் விழிவைத்துக் கிடந்தனர். அஞ்சலை, வீட்டுக்கு வெளியே வந்து தெருவிலே நின்று மகனின் வரவு பார்ப்பதும் பிறகு உள்ளே செல்வதுமாக இருந்தாள். பிள்ளைப்பாசமென்பது பெரிய நிலையில் உள்ள குடும்பங் களுக்கும் நடுத்தர நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் மட்டும் சொந்தமானதல்லவே! ஏழை எளிய சாதாரணக் குடும்பங்களி லும் அந்தப் பாசத்திற்குக் குறைவு கிடையாது. ஆனால் ஒரு வேறுபாட்டினைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. பணம், துருப்பிடித்துக் கிடக்கும் இரும்புப் பெட் டிக்கு உரியவனின் வீட்டில் வயது வந்த பெண்ணோ பிள்ளையோ அற்ப ஆயுளில் மரணம் அடைந்துவிட்டால்கூட அவர்களை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருக்க மாட்டார்கள். அன்பு வரண்டுவிட்டதாக அதற்கு அர்த்தமில்லை. அவர்களுக்கு இருக் கிற தொழில்துறை அலுவல்கள், அவற்றையொட்டிய பய ணங்கள், நிகழ்ச்சிகள், சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து அந்த சோகத்தை மறக்க அடிக்கச் செய்துவிடுகின்றன. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/22&oldid=1702177" இலிருந்து மீள்விக்கப்பட்டது