பக்கம்:ஒரே இரத்தம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே கதைதான் ஏழைகளின் இல்லத்திலும்! வெள்ளத்தில் எத்தனையோ பிள்ளைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பெற்ற தாயும் தகப்பனும் கதறியழுகிறார்கள். ஆனால் அடுத்த நாள் துயர் துடைப்புப் பணிகளில் தங்கள் வீட்டைக் கட்டிக் கொள்ளப் பணம் பெறுவதற்கோ அல்லது வள்ளல் தன்மை வாய்ந்தோர் வழங்குகிற சேலை வேட்டிகளை வாங்குவதற்கோ கூட்டத்தோடு கூட்டமாகக் ‘கியூ’ வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். என் செய்வது? வயிறு கழுவ வேண்டியிருக்கிறதே; அதனால் பந்த பாசங்கள் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கின்றன. பெரும் சோக நிகழ்ச்சிகளில் முழுமையாகத் தங்கள் இதயத்தை இணைத்துக்கொண்டு, வெந்து நைந்து போகிறவர்கள் பாலும் நடுத்தரக் குடும்பத்து மக்களாகத்தான் றார்கள். இது நாட்டில் உலகில் பரவலாகக் காணக்கிடைக்கிற உண்மை! - - இந்த இலக்கணத்திற்கு விதிவிலக்கான இருக்கி குடும்பங்களும் இந்~ மூன்று அடுக்கில் இல்லாமற் போய்விடவில்லை. மாரியின் குடும்பம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தது மட்டுமல்ல; அந்த மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பது பேருடன் நீங்கா உறவு கொண்டுள்ள வறுமைக்கும் தொடர்புடைய குடும்பந்தான். பதினைந்து வயதிலே பருவமடைந்து கடைந்தெடுத்த கற் சிலை போலக் காட்சி தரும் செங்கமலத்துக்கு இப்போது வயது பதினெட்டு! இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அவளுக்குத் திருமணம் நடத்திப் பார்க்க மாரியும் அஞ்சலையும் துடித்துக்கொண்டு தானிருக்கிறார்கள். பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்காததுகூடக் காரண மில்லை. இரண்டாயிரம் ரூபாயாவது இருந்தால்தான் ஓரளவு திருப்தியாக திருமணத்தை நடத்த முடியும். இந்தப் பணத்தை பண்ணையாரிடமோ வேறு யாரிடமோ கடனாகப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்துவதற்குள் படவேண்டிய சங்கடங்களை மாரி, ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. தானும் தன் மகன் பொன்னனும் பாடுபட்டு உழைத்து அதில் மிச்சப்படுத்துகிற பணத்தில் பொன்னன் திருமணத்தையும், செங்கமலம் திருமணத்தையும் நடத்திட வேண்டும் என்பது தான் அவன் முன்மொழிந்து அவன் வீட்டார் ஏற்றுக் கொண்ட தீர்மானமாகும். ஒரு வருடத்திற்கு மேலிருக்கும். பக்கத்து ஊர் டூரிங் சினிமாவில் நான் பெத்த பெண்ணு என்று படம் வெளி யாகியிருந்தது. செங்கமலத்துக்குச் சிறுவயதிலிருந்தே 23 சினிமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/23&oldid=1702178" இலிருந்து மீள்விக்கப்பட்டது