பக்கம்:ஒரே இரத்தம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை உண்டு. பருவமடைந்த பிறகு படம் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. படத்தின் பெயர் நன்றாயிருக்கிற தேயென்று அஞ்சலை, தன் மகள் செங்கமலத்தை அழைத்துக் கொண்டு அந்த டூரிங் தியேட்டருக்கு இரண்டாவது காட்சிக் குப் போயிருந்தாள். தரை தரை டிக்கெட்தான். பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் முதல் காட்சிக்கு வந்திருந்த பெண்மணிகள் துப்பியிருந்த வெற்றிலை பாக்கு எச்சிலை மணல் கொண்டு மூடிவிட்டு அதன்மீது பழைய துணியை விரித்து உட்கார்ந்துகொண்டு படம் பார்த்தனர். தனியாகக் கழிகள் கொண்டு அடைத்து நாற்காலிகள் போடப்பட்டிருந்த முதல் வகுப்பில் பண்ணையாரும் அவர் மனைவி பார்வதியம்மாளும், மகள் காமாட்சியும் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களைப் பார்த்து விடக் கூடாது என்ற மரியாதை கலந்த அச்சத்துடன் அஞ் சலையும், செங்கமலமும் தங்கள் மு கங்களைப் பனைமரத் தூண் களுக்கிடையே மறைத்துக்கொண்டனர். . காமாட்சிக்கும் செங்கமலத்தின் வயதுதான் இருக்கும் என்பதுபோல் தோன்றினாலும் அவள் பதினைந்தாவது வயதில் பருவமடைந்து நாலைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டாள். · செங் கமலம்; செதுக்கப்பட்ட கற்சிலையென்றால், காமாட்சி; வார்த்தெடுக் கப்பட்ட பொற்சிலையென்று கூறலாம். வண்ண வேறுபாடே தவிர, வடிவழகில் இருவரையும் போட்டிக்கு விடலாம். பரிசை யாருக்கு அளிப்பது என்பதில் பந்தயத்து நீதிபதிகள் திணறவே நேரிடும். செங்கமலத்திற்கு மணவிழா நடக்காததற்கு வறுமை காரணம்! செல்வந்தர் வீட்டுச் செல்வி காமாட்சி ஏன் இன்னும் காத்துக் கிடக்கிறாள்? ‘வீட்டுக்கு வீடு வாசற்படிதான்' என்ற கிராமீய மொழிக்கொப்ப அங்கும் பிரச்சினை இல்லாமல் இல்லை. எத்த னையோ பட்டதாரி மாப்பிள்ளைகள், உத்தியோகங்களில் இருப் பவர்கள், காமாட்சியைப் பெண் பார்த்து தங்களின் மனப் பூர்வமான விருப்பத்தையும் கூறியிருக்கிறார்கள். - ஆனால் நாலைந்து வருடங்களாகவே காமாட்சியின் திரு மணம் தள்ளிப் போடப்பட்டுக்கொண்டே வருகிறது. வருகிற மாப்பிள்ளைகள் எல்லாம் காமாட்சியைத் திருமணம் செய்து கொள்ள ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு 'பட்ஜெட்' போட்டுப் பண்ணையாரிடம் முழு மானியத்தையும் எதிர்பார்க்கிறார்கள். கார் வேண்டும் பட்டணத்தில் ஒரு வீடு வேண்டும் - இப்படிப் பட்டியல்கள் நீண்ட காரணத்தால் பண்ணையார், காமாட்சியின் திருமணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்தார். ‘பச் சைக்கிளி மாதிரி பெண்ணைப் பெற்று வச்சிருக்கேன். வர்ர பயல் எல்லாம் என் பெண்ணைவிட என் பணத்தையில்ல ரொம்ப அதிகமா நேசிக்கிறானுங்க!” என்று வசைபாடிக்கொண்டி ருந்தார் பரமேஸ்வரன். ஆனால் அவர் மகன் மகேஸ்வரனுக் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/24&oldid=1702179" இலிருந்து மீள்விக்கப்பட்டது